“அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.” – யோவாண் 2:24-25
ஒரு சமயம் நான் ஒரு ஏமாற்றமளிக்கும் சூழ் நிலையில் இருந்த போது தேவன் யோவாண் 2:24-25 வசனங்களை என் நினைவிற்கு கொண்டு வந்தார். அது இயேசு தம் சீஷர்களுடனே இருந்த போது அவரது உறவைப் பற்றி பேசுகின்றது.
இயேசு தம்மை ‘அவர்களிடம்’ ஒப்புக் கொடுக்கவில்லை என்று தெளிவாகக் கூறுகிறது. அவர்களுடன் அவர் உறவாக இருந்து அவர்களோடு வாழ்ந்த போதும், அவர்கள் பரிபூரணமானவர்கள் இல்லை என்பதை அறிந்திருந்தார். அவர் மனித சுபாவத்தை அறிந்தவராய் ஒரு சம நிலையற்ற வகையிலே தம்மை அவர்களிடம் ஒப்படைக்கவில்லை.
தேவனிடத்தில் மட்டுமே இருக்க வேண்டிய என் நம்பிக்கையை, சபையில் இருப்பவர்களிடம் வைத்ததால் ஏமாற்றமடந்தேன். நாம் எந்தவொரு மனித உறவையும் ஒரளவிற்கு தான் கொண்டிருக்க இயலும். தேவ ஞானத்திற்கு அப்பாற் செல்வோமேயாயின் நாம் மனக்காயமடைவோம். இவர்கள் என்னை ஒருபோதும் காயப்படுத்த மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு, பின்னர் நாம் எதிர்பார்க்கும் அந்த அளவுகளிலே அவர்கள் வாழவில்லை என்பதைக் கண்டு ஏமாற்றமடையும் கண்ணிக்குள் மாட்டிக் கொள்வது சுலபமானதே. யாரும் பரிபூரணரல்ல.
நற்செய்தி என்னவென்றால் தேவன் பரிபூரணர், அவர் நம்மை ஏமாற்ற மாட்டார். அவர் எப்போதுமே அன்பாகவும், நல்லவராகவும் இருக்கிறார். தேவனிடம் வைக்க வேண்டிய நம்பிக்கையை மனுஷரிடம் வைக்காதீர். உங்களை முற்றிலுமாக அவரிடம் ஒப்படையுங்கள். அவரே பரிபூரணமாக நம்பத்தக்கவர்.
ஜெபம்
தேவனே, எந்தவொரு மனுஷனும் பரிபூரணர் அல்ல, ஆனால் நீர் பரிபூரணர். எல்லா நேரங்களிலும் என் நம்பிக்கையை உம்மீது வைக்க விரும்புகிறேன். நீர் ஏமாற்ற மாட்டீர் என்று நம்புகிறேன். இன்று உம்முடைய பரிபூரணத்திலே ஆறுதலைடைகிறேன்.