“இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.” – கலா 1:10
தேவன் உங்களை சிருஷ்டித்தபடி நீங்கள் இருக்கிறீர்களா அல்லது நீங்கள் “மனிதர்களைப் பிரியப்படுத்த” வாழ்கிறீர்களா? இந்த வசனத்தின் படி, நாம் தேவனைப் பிரியப்படுத்துவதும், நாம் எப்படி இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ. அப்படி இருப்பதும் தான் தேவனுடைய சித்தமாக இருக்கிறது.
தேவன் உங்களை உருவாக்கிய நபராக, தனித்துவமானவராகவும், வித்தியாசமாகவும் இருக்க நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது – சில விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். அதை சமாளிப்பது எப்போதுமே எளிதானது அல்ல. ஆனால் நீங்கள் உங்கள் சொந்த நம்பிக்கைகளுக்கு எதிராகச் சென்றால் உங்களை நீங்கள் மிகவும் விரும்ப மாட்டீர்கள்.
கடவுள் உங்களை வேறு வழியில் வழிநடத்துகிறார் என்பதை உங்கள் இருதயத்தில் நீங்கள் அறிந்திருக்கும்போது, எல்லோரோடும் இணைந்து செல்வது தான், மக்கள் அவர்களாக இருப்பதற்கு ஒரு காரணம் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.
கடவுள் உங்களை உண்டாக்கிய நபராக இருக்கவே உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். மற்றொரு நபர் உங்களை நடத்தும் விதம் அல்லது உங்களிடம் நடந்து கொள்ளும் விதம் உங்கள் தகுதியை தீர்மானிக்க விடாதீர்கள். வித்தியாசமாக இருக்கவும், விமர்சனங்களை சமாளிக்கவும் தைரியம் வேண்டும்.
கடவுள் உங்களை ஏற்றுக்கொள்கிறார், உங்களை நேசிக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். ஒரு காரணத்திற்காக நீங்கள் இருக்கும் வழியை அவர் உண்டாக்கினார். நீங்கள் அவரிடம் கொடுப்பதற்கு சிறப்பான ஒன்று உண்டு.
ஜெபம்
தேவனே, மனுஷரைப் பிரியப்படுத்த நான் வாழ விரும்பவில்லை. நான் தைரியத்துடன் வித்தியாசமான நபராக இருக்க விரும்புகிறேன். நீர் என்னை உருவாக்கிய நபராக, உம்முடைய தயவுடன் வாழ விரும்புகிறேன்.