
“அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.” – 1 தீமோ 1:16
வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட மனக்காயங்களையே பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் போது, திருமணங்கள் எவ்வளவு அருமையானதாக இருக்க வேண்டுமோ அப்படியாக இருக்கிறதில்லை. நீங்கள் மனக்காயமடைந்திருக்கும் போது உங்களை முழுவதுமாக ஒருவருக்கு திறந்து கொடுப்பது கடினம் என்று எனக்குத் தெரியும். ஆனால் ஒருவரை நேசிப்பது அவரை காயப்படுத்தாது என்று யாரும் உறுதியளிக்க முடியாது. உண்மையில், நீங்கள் காயப்பட தயாராக இல்லாமல், உண்மையாக நேசிக்க முடியாது. இது சாத்தியம் இல்லை.
உண்மையான அன்பு இரக்கத்தைக் காட்டுகிறது, மன்னிக்கிறது. அன்பு மற்ற நபருக்கு மற்றொரு வாய்ப்பைத் தருகிறது. அன்பு அவர்களை மீண்டும் மீண்டும் நம்புவதற்கு தயாராக உள்ளது. அடுத்த முறை அவர்கள் சரியானதைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறது. அவர்களில் இருக்கும் சிறந்ததை நம்புகிறது.
தினசரி, உங்கள் திருமண வாழ்க்கையில், நீங்கள் கையாளும் சிறிய விஷயங்களுடன், பெரிய மனக் காயங்களும் இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். ஆனாலும், அதன் எரிச்சலூட்டும் பிடியை நீங்கள் விட்டு விட முடிவு செய்ய வேண்டும். உண்மையிலேயே மன்னிப்பதற்கான கிருபைக்கும், பெலத்திற்கும் ஜெபிக்க தேவனை சார்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் திருமணத்தில் நீங்கள் மன்னிக்க முடியாமல் போராடுகிறீர்களானால், உங்கள் கசப்பிற்கும், வெறுப்பிற்கும் என்ன காரணம் என்பதை வெளிப்படுத்த தேவனிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு வெளிப்படுத்தியதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம், ஆனால் நீங்கள் உண்மையைக் காணும்போது, மனக்காயத்தை விட்டுவிட முடிவு செய்யுங்கள்.
உங்கள் வாழ்க்கைத் துணையை மன்னிக்கவும், கடவுளின் ஆச்சரியமான, நிபந்தனையற்ற அன்போடு அவர்களை நடத்தும்போது பொறுமையுடன் இருக்க முடிவு செய்யுங்கள்.
ஜெபம்
தேவனே, எனது திருமணம் மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மன்னிக்காத எந்தவொரு பகுதியையும் விட்டு விட்டு, என் வாழ்க்கைத் துணையை நீங்கள் விரும்பும் விதத்தில் பொறுமையாக நேசிக்க எனக்கு உதவும்.