“தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.” – நீதி 27:19
ஒவ்வொருவரும் பாராட்டுகளை விரும்புகின்றனர். ஆனால் வெகு சிலரே குறை கூறுதலை எப்படி எடுத்துக் கொள்வது என்பதை அறிந்திருக்கின்றனர். எவருமே தவறாக இருக்க விரும்புகிறதில்லை. நாம் கேட்க விரும்பாதவற்றை மக்கள் நம்மிடம் சொல்லும் போது அது கடினமாக இருக்கிறது.
ஆனால் பிறரின் நேர்மைக்காக, நாம் நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும். நான் ஒருமுறை ஒருவர் இவ்வாறாக சொல்லக் கேட்டேன். உங்களைப் பற்றிய உண்மையை இரண்டு நபர்கள் தான் சொல்வார்கள். உங்கள் மேல் கோபமாயிருக்கும் ஒருவரும் உங்களை நேசிக்கும் ஒருவரும் தான். தேவன் இத்தகைய இரண்டு விதமான நபர்களையும், நம் வாழ்வில் உபயோகிக்கின்றார். ஆயினும் விசேசமாக நண்பர்களிடமும், அன்புக்குறியவர்களிடமும் இருக்கும் நேர்மையை உபயோகிக்கின்றார்.
ஒருவர் அன்பினாலே நீங்கள் எப்படி மேம்படலாம் என்பதை நேர்மையாக காண்பிக்கும் போது, அதன் விளைவுகள் வெறும் பாராட்டுகளை கொடுப்பதை விட அதிக விலையேறப்பெற்றதாக இருக்கிறது. இத்தகைய உறவைத்தான் வேதம் கிருபை என்று குறிக்கிறது.
நீங்கள் கேட்க விரும்புவது அதுவாக இல்லாவிட்டாலும் உங்களைப் பற்றிய உண்மையை உங்களிடம் சொல்பவர்களுக்காக நன்றியோடிருங்கள் என்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நீங்கள் உண்மையைக் கேள்விப்படும் போது, -நீங்கள் அறியாத உண்மையை- நீங்கள் மாற இயலும். நேர்மைதான் உங்களை சிறப்பானவர்களாக மாற்றும்.
ஜெபம்
தேவனே, என் வாழ்விலே உண்மையான நேர்மையுள்ளவர்களை வைத்திருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். அவர்களுடைய நேர்மையானது என்னை சில சமயங்களிலே சங்கடத்துக்குள்ளாக்கக் கூடும். ஆனால் நான் அவர்களுக்கு செவிமடுக்கும் போது சிறப்பானவனாக நீர் என்னை மாற்றுகின்றீர் என்பதை அறிந்திருக்கிறேன்.