
“நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.” – மத்தேயு 26:41
இயேசு சிலுவையிலறையப்பட்டதற்கு முந்தின இரவில், அவரது சீஷர்களை அவர் கெத்சமனே தோட்டத்தில் கூட்டி ஒரே ஒரு வேண்டுகோளை வைத்தார். நீங்கள் சோதனைக்குட்படாத படிக்கு, விழித்திருந்து கவனமாக ஜாக்கிரதையாக ஜெபிக்க வேண்டும் (மத்தேயு 26:41).
சீஷர்கள் செய்யவேண்டி இருந்ததெல்லாம் விழித்திருந்து ஜெபிப்பது. ஆனால் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இயேசுவோ ஜெபித்தார். ஒரு தூதன் அவரை, சிலுவையை சகித்துக்கொள்ள ஆவியிலே பெலப்படுத்தினார். சீஷர்களோ ஜெபிக்கவில்லை. அவர்கள் தூங்கினார்கள் – மாம்சம் உண்மையிலேயே பெலவீனமானது என்பதை நிரூபித்தனர்.
எனக்கு இந்த கதையானது ஜெபத்தின் முக்கியத்துவத்தை நிரூபிக்கின்றது. கிறிஸ்தவர்களாக அனுதின ஜெபம் இன்றியும், தேவனுடனான சம்பாஷனையும் இல்லாமல் இருக்கும் என்றால், நம்மிடம் எதுவுமே இல்லை.
நாம் அனைவருமே பலவீனமான மாம்சத்தின்படி வாழ்வதன் மூலம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் ஜெபத்தை முன்னுரிமைப் படுத்தும்போது, தேவன் நம்மை ஆவியில் பெலப்படுத்துகிறார். இதனால் மாம்சத்தின் குறைபாடுகளை மேற்கொள்ளுகிறோம்.
இன்று பெலத்திற்காக எதை சார்ந்திருக்கிறீர்கள்? உங்கள் மாம்சத்தையா? அல்லது நாம் தேவனிடம் வரும்போது, அவர் கிருபையாக நமக்களிக்கும் பெலனை அனுபவிக்கின்றார்களா?
ஜெபம்
தேவனே, நான் ஜெபிக்கும்போது நீ எனக்குக் கொடுக்கும் பெலத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்மையல்லாமல் நான் பலவீனமானவன் என்று அறிந்திருக்கிறேன். உம்முடைய பலன் எனக்கு போதுமானதற்கும் மிகவும் அதிகமாக இருக்கிறது என்று அறிந்தவனாக, தொடர்ந்து ஜெபத்தால் உம்மிடம் வருவதை தெரிந்து கொள்கிறேன்.