
“அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.” – நீதி 2:7-9
வாழ்க்கை பாதையில் ஆவிக்குறிய “அடையாளங்கள்” இருக்கின்றன. தேவனுடைய பாதுகாப்பில் இருக்க, நீங்கள் அவரை நம்பவும், கவலைப் படாமலிருக்கவும் உங்களிடம் சொல்லும் இந்த அறிகுறிகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். பயப்பட வேண்டாம்; தைரியம் வேண்டும். இந்த அறிகுறிகளில் நீங்கள் கவனம் செலுத்தினால், நிச்சயமாக பாதை மாறாமல் தொடர்ந்து உங்கள் பாதையில் இருப்பது எளிது. தேவனால் மட்டுமே வழங்கக்கூடிய பாதுகாப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
இருப்பினும், நீங்கள் அறிகுறிகளைக் கவனிக்கத் தவறினால், சாலை, வழக்கத்தை விட சற்று மேடுகளால் நிறைந்திருப்பதை நீங்கள் கவனிக்கலாம். மேலும் நீங்கள் ஒரு காலத்தில் இருந்ததைப் போல உங்கள் திறன்களில் எவ்வளவு உறுதியாக இருந்தீர்களோ அப்படியாக இப்போது இல்லாததை கவனிப்பீர்கள். உங்களுக்கு தெரியாத காரியங்கள் ஆங்காங்கே உங்களுக்காக காத்துக் கொண்டு இருப்பதைக் கண்டு கவலைப்படுவீர்கள். அல்லது பாதை மாறி கூட சென்று விடுவீர்கள்.
நீங்களும் நானும் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் தேவன் நம் பாதைகளைக் காத்து நம் வழியைப் பாதுகாக்க விரும்புகிறார். ஏன் அவருடைய அறிகுறிகளைப் புறக்கணித்து, கவலைப்பட வேண்டும்?. கவலைப்படுவது எதையும் தீர்க்கப் போவதில்லை எனும் போது.
கீழ்ப்படிதலின் மனப்பான்மையைக் கொண்டிருங்கள். அவருடைய அடையாளங்களைக் காணும்போது அவற்றைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவருடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றும்போது, எப்போதும் உங்கள் இலக்கை அடைவீர்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, நீங்கள் எனக்கு வாழ்க்கை பாதையில் வைத்துள்ள ஆவிக்குறிய அடையாளங்களைக் காண எனக்கு உதவும். நான் அவற்றை பார்க்கும்போது, நான் கீழ்ப்படிந்து, வாழ்க்கை முழுவதும் உம்மை பாதுகாப்பாகப் பின்பற்றுவேன்.