மென்மையான மனசாட்சியைக் காத்துக்கொள்ளுங்கள்

மென்மையான மனசாட்சியைக் காத்துக்கொள்ளுங்கள்

ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள். விவாகம்பண்ணாதிருக்கவும். (1 தீமோத்தேயு 4:1–2)

இன்றைய வசனங்கள், ஒருவருடைய மனசாட்சியின் “வெட்டுண்ட” அல்லது “சூடுபட்ட”நிலையைக் குறித்துப் பேசுகிறது. காயத்தை கிளரினால், அதன் வடு, திசுக்களாக மாறி, அதனால் எதையும் உணர முடியாமல் போகும். அதுபோலவே, மக்களின் மனசாட்சியும் கடுமையாய் மாறும்போது, தாங்கள் உணர வேண்டியதை உணரமுடியாமல், கடினமானவர்களாகவும், உணர்ச்சியற்றவர்களாகவும் மாறி விடுகிறார்கள். பல வருடங்களாக கீழ்ப்படியாமை மற்றும் தனிப்பட்ட வலி, நம்மை மென்மையாக்குவதற்கு பதிலாக கடினமாக்கலாம், ஆனால் கடவுளின் கிருபையால் நாம் மாறலாம். நாம் கடவுளிடம் மென்மையாக இருக்க விரும்புகிறோம், அதனால் நாம் மற்றவர்களை காயப்படுத்தும்போது அல்லது அவருக்கு கீழ்ப்படியாமல் இருக்கும்போது உடனடியாக உணர முடியும்.

மென்மையான இருதயத்தையும், மனசாட்சியையும் கடவுளிடம் கேளுங்கள், அதனால் நீங்கள் அவரைப் பற்றியும் அவர் உங்களுடன் தொடர்பு கொள்வதையும் உணர முடியும். பல ஆண்டுகளாக தனிப்பட்ட வலி மற்றும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமையால் கடினமான இருதயத்தைக் கொண்டவர்களை நீங்கள் அறிந்திருந்தால், அவர்களுக்காகவும் ஜெபியுங்கள். நம்முடைய நடத்தை கடவுளைப் பிரியப்படுத்தாத போது, உடனடியாகப் புரிந்து கொள்வது ஒரு அழகான விஷயம். அவர் உங்களுடன் பழகுவதை, நீங்கள் உணரும் ஒவ்வொரு முறையும் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள், மேலும் உங்கள் மனசாட்சியை அவரிடம் மென்மையாக வைத்திருக்க, பரிசுத்த ஆவியுடன் தொடர்ந்து பணியாற்றுங்கள். நாம் அவருடைய மன்னிப்பைக் கேட்டு, உடனடியாக நம் நடத்தையை மாற்றிக் கொள்ளலாம்: “அப்பா, எனக்காகவும், மனச்சாட்சியைக் கடினப்படுத்திய என் அன்புக்குரியவர்களுக்காகவும் நான் ஜெபிக்கிறேன். எங்களிடம் உள்ள அந்த கடினத்தன்மையை அகற்ற நீர் கிரியை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து எங்கள் இருதயங்களை உம்மிடம் மென்மையாக்குங்கள். உமது வழிநடத்துதலுக்குப் பதிலளிக்கக்கூடிய மென்மையான இருதயங்களை எங்களுக்குத் தந்தருளுங்கள், அப்பொழுது நீர் எங்களிடம் என்ன சொல்கிறீர் என்பதையும், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்பதையும் நாங்கள் உடனடியாக உணர முடியும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருங்கள், ஆனால் உங்கள் இருதயத்தில் மென்மையாக இருங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon