“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.” – நீதிமொழிகள் 18:21
நாம் பேசும் வார்த்தைகளில் தான் மரணமும், ஜீவனும் இருப்பதாக வேதம் தெளிவாகக் கூறுகிறது. நம் வாயைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது. ஆனால் நாம் அதை சரியான வழியில் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
சிலர் வாயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணங்களைப் பற்றி எதுவும் செய்வதில்லை என்று நினைக்கிறேன். இது களைகளின் வேர் பகுதியை பிடுங்காமல், மேற்புறத்தை மட்டும் பிடுங்குவது போன்றது. அப்படி செய்வதால் களை மீண்டும் முளைத்து வரும். நீங்கள் முதலில் உங்கள் மனதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளாதவரை, உங்கள் வாயை ஒருபோதும் கட்டுப்படுத்த மாட்டீர்கள்.
தவறான எண்ணங்களை சிந்திக்க அனேக சமயங்களிம் நாம் அடிக்கடி சோதிக்கப்படுகிறோம். ஆனால் அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நமக்கு ஒரு தெரிந்து கொள்ளுதல் இருக்கிறது! நாம் சரியான சிந்தனையை வேண்டுமென்றே தேர்வு செய்யலாம், அதனால் சரியான பேச்சையும் தேர்வு செய்யலாம்.
தேவனைப் பற்றியும் அவருடைய வார்த்தையை கேட்பது, படிப்பது, சிந்திப்பது மற்றும் பேசுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை உருவாக்கும் எண்ணங்களைத் தேர்வு செய்யலாம். உள்ளே என்ன இருக்கிறதோ அது வெளியே வரும்.
எனவே நீங்கள் நல்ல, நேர்மறையான, வல்லமை நிறைந்த, ஜீவனை கொடுக்கும் காரியங்களை உங்கள் மனதில் நிரப்பும் போது, நீங்கள் அதன் வழியாக கடவுளிடமிருந்து, நேர்மறையான, வல்லமை நிறைந்த, ஜீவனை கொடுக்கும் வார்த்தைகள் இயற்கையாகவே வெளிப்படுவதை காண்பீர்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, நான் என் எண்ணங்களை மாற்ற விரும்புகிறேன். அதனால் நான் ஜீவனைக் கொடுக்கும் வார்த்தைகளைப் பேச முடியும். உம்முடைய வார்த்தையால் என் மனதைப் புதுப்பிக்க எனக்கு உதவும். அதனால் என் வார்த்தைகள் உம்மை பிரதிபலிக்கும்.