“அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;” – மாற்கு 10:18
யதார்த்தத்தை மீறும் எதிர்பார்ப்புகள் நம் சந்தோசத்தையும், சமாதானத்தையும் சீக்கிரமாகவே திருடி விடுகின்றது. நாம் பொதுவாக ஒரு பரிபூரண நாளுக்காக, பரிபூரணமான மக்களுடன், நம் பரிபூரணமான சிறிய உலகத்திலே பரிபூரண சந்தோசத்துடன் இருக்க விரும்புகிறோம். ஆனால் அது யதார்த்தமல்ல என்பதை எல்லோருமே அறிந்திருக்கிறோம். உண்மையில் தேவன் மட்டும் தான் பரிபூரணர், மற்ற அனைவரிலும் பரிபூரணப்படுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நம் சமாதானத்தை எது திருடுகிறது என்று பிசாசு அறிந்திருக்கிறான். அதனால் நம் யதார்த்துக்கு அப்பாற்பட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும் போது, நாம் வருத்தப்பட வேண்டுமென்பதற்காக, எதை செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறான்.
பல வருடங்களாக பிசாசு என் சமாதானத்தை திருட அனுமதித்தேன். பின்னர் அதை புரிந்து கொண்டேன். வாழ்க்கை பரிபூரணமற்றது. நாம் திட்டமிடாத அல்லது நடைபெற விரும்பாத காரியங்கள் நடக்கத்தான் போகிறது. என்னுடைய புதிய மனப்பான்மையானது, ‘ஓ அது
தான் வாழ்க்கை…அந்தக் காரியங்களெல்லாம் என்னை ஈர்க்க நான் அனுமதிக்கா விட்டால் அவை என்னை சோர்வடைய செய்யாது’ என்பதை கண்டு பிடித்தேன்.
எல்லோருமே அசவுகரியங்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது, ஆனால் ஒரு கெட்ட மனப்பான்மையை தவிர்த்து, அதனை சமாளிக்க, தேவன் ஒருவரே பரிபூரணர் என்பதை நினைவில் கொண்டு அவரை நம்பக் கற்றுக் கொள்ளுங்கள். சூழ்னிலைகளைக் கடந்து செல்ல அவர் உங்களை நடத்துவார், பெலப்படுத்துவார். உங்கள் சமாதானத்தை பற்றிக் கொள்ள உதவுவார்.
ஜெபம்
தேவனே நீர் ஒருவரே பரிபூரணர். மக்களும் சூழ்னிலைகளும் மாறும் போதும் நீர் மாறாதவராக இருப்பதற்காக மகிழ்கிறேன். என்னை ஏமாற்றும் காரியங்களின் மேல் நம்பிக்கையை வைப்பதற்கு பதிலாக, உம்மீது நம்பிக்கையை வைப்பதால் கிடைக்கும் ஒரு சமாதானமான வாழ்க்கையை நான் தெரிந்து கொள்கிறேன்.