“கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள்.” – சங்கீதம் 138:5
நான் மிகவும் தீவிரமாக இருந்தேன். என் குழந்தைகள் எப்படி நடந்து கொள்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து நான் தீவிரமாக இருந்தேன். எனது வீடு எப்படி இருந்தது என்பது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நான் தீவிரமாக இருந்தேன். என் கணவர் எப்படி இருக்க வேண்டுமென்று நான் நினைத்தேனோ அப்படியாக அவரை மாற்ற முயற்சிப்பதில் நான் தீவிரமாக இருந்தேன். நான் தீவிரமாக இல்லாத எதையும், உண்மையில் சிந்திக்க முடியவில்லை. நான் உண்மையிலேயே செய்ய வேண்டியது என்னவென்றால், என்னை லேசாக்கிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டியிருந்தது!
அன்றாட வாழ்க்கையில் கடவுளை எப்படி நம்புவது என்று எனக்குத் தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் நான் சமநிலையில் இல்லை. கொண்டாட்டமும், இன்பமும் நம் வாழ்வில் அவசியம் என்பதை நான் இன்னும் உணரவில்லை – அது இல்லாத படி நாம் ஆவிக்குறிய ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஆரோக்கியமாக இருக்க முடியாது! உண்மையில், கொண்டாட்டம் மிகவும் அவசியமானது. அவர் கொண்டாடும்படி நமக்கு கட்டளையிடுகிறார்.
உங்கள் குடும்பத்துக்கும், உலகத்துக்கும் நீங்கள் வழங்கக்கூடிய சிறந்த பரிசு ஆரோக்கியமான நீங்கள் – மற்றும் கொண்டாட்டம். உங்கள் வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக அது இல்லாமல் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியாது. இன்று, உங்கள் வாழ்க்கையில் முழு சூழ்நிலையையும் கொண்டாட்டத்துடன் மாற்றவும், ஒளிரச் செய்யவும் உங்களுக்கு அனுமதி கொடுங்கள்!
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, என்னை மிகவும் தீவிரமாக இருக்க விடாதீர். ஒளிரச் செய்து, கொண்டாட எனக்கு அனுமதி அளிக்க உதவி செய்யும். ஒவ்வொரு நாளும் உம்முடைய நன்மையை அனுபவிக்க உதவி செய்யும்.