“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” – எபி 4:12
வேதத்தை எங்கே படிக்க தொடங்குவது என்று மக்கள் என்னிடம் கேட்கும்போது, தொடங்குவதற்கு தவறான இடம் எதுவுமில்லை என்று நான் அவர்களிடம் சொல்வேன். உங்களுக்கு உதவப் போகும் எதையும் நீங்கள் படிக்கலாம்.
நான் முதன்முதலில் வேதத்தைப் படிக்கத் தொடங்கியபோது, எனக்கு நல்ல உறவுகள் இல்லை. ஏனென்றால் அன்பு என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் அன்பைப் பற்றி அதிகம் படிக்க தொடங்கினேன். அது ஒருவிதமான நல்ல உணர்வை விட அதிகம் என்பதை நான் அறிந்தேன். மக்களை எவ்வாறு நடத்தப் போகிறீர்கள் என்பது பற்றி நீங்கள் எடுக்கும் முடிவு இது.
அன்பைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது என்பதைப் படிப்பதன் மூலம், எப்படி நேசிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். பின்னர் என் வாழ்க்கை மாறத் தொடங்கியது.
நீங்கள் எதைக் கையாண்டாலும், ஒத்தவாக்கியங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதைப் பற்றிய வசனங்களைக் கண்டு பிடியுங்கள். உதாரணமாக, நீங்கள் பயத்தோடோ, கோபத்தோடோ போராடிக் கொண்டிருப்பீர்களேயானால், உங்கள் வேதாகமத்தின் பின்புறத்தில் உள்ள ஒத்திவாக்கியங்களை எடுத்து, அந்த விஷயங்களைப் பற்றிய வசனங்களை கண்டறியவும். பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்தவும், உங்களுக்கு உண்மையை வெளிப்படுத்தவும் அவரைக் கேளுங்கள்.
நீங்கள் எங்கிருந்து தொடங்கினாலும் சரி, வார்த்தை உயிருடன் இருக்கிறது என்பதையும், இன்று தேவன் உங்கள் இருதயத்துடன் பேச விரும்புகிறார் என்பதையும் நினைவில் வையுங்கள்!
ஜெபம்
ஆண்டவரே, நீர் என்னிடம் பேச விரும்புகிறீர் என்று எனக்குத் தெரியும். இன்று உம் வார்த்தையில் எனக்குத் தேவையான ஞானத்தையும் வல்லமையையும் கண்டுபிடிக்க எனக்கு உதவும்.