
“என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.” – நீதி 4:20
கடவுளுடைய வார்த்தையை எவ்வாறு படிப்பது என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான்கு பயனுள்ள உதவிக் குறிப்புகள் இங்கே:
- வேண்டுமென்றே நேரத்தை ஒதுக்குங்கள். காலையில் கடவுளுடன் ஒரு சந்திப்பை நியமியுங்கள், அது உங்களுக்கு உதவவில்லையெனில், அனுதினமும் உங்களுக்கு ஏற்ற சமயத்தை நியமித்துக் கொள்ளுங்கள். எங்காவது தொடங்கவும், இந்த நேரம் உங்கள் வாழ்விலே கொண்டு வரும் நேர்மறையான பழக்கத்தை நீங்கள் காண்பீர்கள்!
- உங்கள் வேத பாடத்திற்கு தயாராகுங்கள். நீங்கள் விரும்பும் ஒரு இடத்தைத் தேர்வுசெய்க. உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருக்கக்கூடிய ஒரு அறையையோ அல்லது உங்களுக்கு பிடித்த இடத்தையோ தெரிவு செய்யுங்கள்.
- உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பைபிளையும், ஒரு நல்ல பைபிள் அகராதி, ஒத்த வாக்கியம், பேனா மற்றும் காகிதத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வகையில், தொடர்புடைய வசனங்களைக் குறிப்பிட அல்லது ஏதாவது எழுத நீங்கள் தயாராக உள்ளீர்கள்.
- உங்கள் இருதயத்தை தயார் செய்யுங்கள். நீங்கள் அறிக்கையிட வேண்டிய விஷயங்களைப் பற்றி கடவுளிடம் பேசுங்கள். தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டை பெற்றுக் கொள்வதை தடுக்கும் எதுவும், இல்லாத படி உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கும்,கடவுள் விரும்பும் நபராக மாறுவதற்கும் அதில் வல்லமை இருப்பதால், வார்த்தையைப் படிக்க நேரம் ஒதுக்குங்கள்.
ஜெபம்
ஆண்டவரே, உம்முடைய வார்த்தையை உண்மையிலேயே படிக்க நேரத்தை ஒதுக்குவது என் இருதயத்தின் நோக்கமாக இருக்கிறது. எவ்வாறு புரிந்துகொள்வது, ஒப்புக்கொள்வது மற்றும் ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையில் என்னை உமக்கு சமர்ப்பிப்பது என்பதை எனக்குக் கற்றுக் கொடும்.