
“துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.” – சங்கீதம் 7:9
வாழ்க்கையானது தேவன் மேல் இருக்கும் நம் விசுவாசத்தையும், நம் தீர்மானங்களையும் சோதிக்கும் சவால்களால் நிரம்பியிருக்கிறது. வரவிருக்கும் தீமையையோ, பழக்கத்தையோ அல்லது அனுதினமும் ஏற்படும் சிக்கல்களையோ நாம் சந்திக்க நேர்ந்தாலும் நம் பண்பின் தரம் நிச்சயமாகவே சோதிக்கப்படும்.
தேவன் நம் இருதயங்களையும், நம் உணர்ச்சிகளையும், மனங்களையும் சோதிக்கிறார் என்ற உண்மையை கண்டுகொள்ளாமல் இருப்பது பெரிய குற்றமாகும். ஒன்றை சோதிப்பது என்றால் என்ன? அது என்ன செய்யும் என்று சொல்லப்படுகிறதோ, அதை அது செய்கிறதா என்று பார்க்க அதை அழுத்தத்திற்கு உள்ளாக்குவது ஆகும். அது அழுத்தத்தை தாங்குமா? அதை உருவாக்கியவர் அது செய்யும் என்று சொன்ன அளவு செய்யுமா? உண்மையான தரத்தோடு அதை அளவிடும் போது அது உண்மையானதாக இருக்குமா?
இதையே தான் தேவன் நம்முடன் செய்கிறார்.
இன்று நீங்கள் சோதிக்கப்படுகின்றீர்களா? நீங்கள் விளங்கிக் கொள்ளாத போதும் தேவனை நம்பிக் கொண்டிருப்பது அதற்கான பதிலாகும். உண்மையாகவே தேவனை நம்பி கொண்டிருக்கும் போது சில பதில் அளிக்கப்படாத கேள்விகள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் உங்கள் சந்தோசத்தோடு முன்நோக்கி செல்லும் போது அவர் உங்களை கட்டி ஸ்திரப்படுத்துவார்.
ஜெபம்
தேவனே, நான் சோதிக்கப்படும் போது, என்ன நேர்ந்தாலும் சரி நான் அழுத்தத்தை தாங்கிக் கொண்டு உம்மைப் பின்பற்ற ஆயத்தமாக இருக்க விரும்புகிறேன். அனுதினமும் நான் உம் மீது என் நம்பிக்கையை எப்படி வைப்பது, என்று சில பதிலளிக்கப்படாத கேள்விகளோடு போராடும் போது எனக்கு காண்பித்தருளும்.