நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். (ஆதியாகமம் 12:2)
என்னுடைய பாதுகாப்பான வேலையை விட்டு விட்டு, என்னுடைய சொந்த ஊழியத்தைத் தொடங்கும்படி கடவுள் என்னை முதலில் அழைத்தபோது, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவது எனக்கு எளிதாக இருக்கவில்லை. ஆனால், தேவன் என்னோடு பேசி, அவர் எனக்காக வைத்திருந்த திட்டங்களில் என்னை ஊக்கப்படுத்தினார். இந்த வசனத்தைப் படித்து யோசிப்பது எளிது, ஆம்! நான் ஆசீர்வதிக்கப்பட விரும்புகிறேன். அது பயங்கரமாக இருக்கிறது! ஆனால், அந்த மாபெரும் வாக்குத்தத்தம் நிறைவேறும் முன், ஆபிரகாமிடம் இருந்து கீழ்ப்படிதலின் பலியை தேவன் எதிர்பார்த்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆபிரகாம் தனக்கு வசதியான மற்றும் பழக்கமான அனைத்தையும் விட்டு விட்டு அறியப்படாத இலக்கை நோக்கி செல்ல வேண்டியிருந்தது. பலர் அதனால் கவலையடைந்திருந்தனர் – ஆனால் ஆபிரகாம் அவ்வாறு செய்யவில்லை. எபிரெயர் 11:8 கூறுகிறது, “விசுவாசத்தினால் ஆபிரகாம் அழைக்கப்பட்ட போது, கீழ்ப்படிந்து, தனக்குச் சுதந்தரமாகப் பெற வேண்டிய இடத்திற்குப் போனான்; அவர் எங்கு செல்ல வேண்டும் என்பது பற்றி அவருக்குத் தெரியாமல் இருந்தாலும் அல்லது அது கடினமாக இருந்தாலும் அவர் சென்றார்.”
நாம் கடவுளுக்குக் கீழ்ப்படியும்போது, நாம் ஆபிரகாமைப் போல இருக்க வேண்டும், நம் மனதைக் கலங்க அனுமதிக்காமல் இருக்க வேண்டும். தேவன் நம்மிடம் பேசி நம்மை வழிநடத்தும் போது, அவர் நம்முடைய கீழ்ப்படிதலை ஆசீர்வதித்து, நமக்கு அளித்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார் என்று விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் பின்பற்ற வேண்டும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்.