
“இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” – ஆபகூக் 2:4
விசுவாசம் என்ற வார்த்தையை நாம் அதிகம் உபயோகிக்கின்றோம், ஆனால் சில சமயங்களிலே அதை அதிக சிக்கலானதாக மாற்றிக் கொள்கிறோம். விசுவாசம் என்றால் நம்பிக்கை அல்லது முழுமையாக நம்புவது எனப்படும். இந்த வார்த்தை வாய்மை மற்றும் அர்ப்பணிப்பையும் குறிக்கிறது.
நாம் மன அழுத்தத்துக்குள்ளாக வேண்டிய அளவு, விசுவாசமானது ஒரு பிரமாண்டமான, சிக்கலான கருத்து இல்லை. தேவன் பேரிலே உண்மையான விசுவாசம் என்பது, இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல் பற்றிய செய்தி முற்றிலும் உண்மை என்று அங்கீகரிப்பதாகும். அதை நான் விளங்கிக் கொண்ட போது, என் வாழ்க்கையை இக்கட்டுக்குள்ளிருந்து விடுதலையாக்க விருப்பமுள்ளவளாக இருக்கிறேன் என்பது உறுதியாகின்றது.
வேதம், விசுவாசத்தினாலும், விசுவாசமுள்ளவனாயிருப்பதாலும் நீதிமான பிழைப்பான் என்று உறுதியாக கூறுகிறது. உறுதியான நீதிமான் என்பவர், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தால் நீதியாக்கப்பட்டவர்களே என்று சொல்ல்லாம்.
விசுவாசத்தால் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம். தேவனும் நம்மை சொந்த பிள்ளகளாய் நடத்துகிறார். இன்று நீங்கள் விசுவாசத்தின் அடிப்படைக்கு திரும்ப வேண்டுமென்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். அவரிலே உங்கள் விசுவாசத்தை வைப்பதினால் நீங்கள் சரிபார்க்கப்படுகின்றீர்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் எப்படி இருக்கின்றீர்களோ அப்படியே உங்களை ஏற்றுக் கொண்டு நேசிக்க தம்முடைய அன்பான கரங்களை உங்களிடம் நீட்டிய வண்ணம் இருக்கும் தேவனை நம்பி வாழுங்கள்.
ஜெபம்
தேவனே, உம்மீது என் விசுவாசத்தை வைத்து, உறுதியான நீதிமானாக்கப்படுவதால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இன்று உம்மீது நான் வைக்கும் விசுவாசத்தால் வாழ்கிறேன்.