
“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.” – பிர 3:1
எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு என்று பிரசங்கி 3:1 சொல்கிறது. நாம் அனைவரும் ஒரே பருவத்தில் ஒரே நேரத்தில் வாழவில்லை. ஒருவர் விதைப்பின் பருவத்தில் இருக்கும்போது, வேறொருவர் அறுவடையை அனுபவிக்கும் நேரங்கள் இருக்கும். அந்த சமயங்களில், அவர்கள் உங்களைப் போலவே விதைப்பின் பருவத்திலும் செல்ல வேண்டியிருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விதைப்பின் காலமானது, தேவனுடைய சித்தத்தை கற்றுக் கொள்வதைக் குறிக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் என் சித்தத்திற்கு பதிலாக தேவனுடைய விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, நான் ஒரு நல்ல விதையை விதைக்கிறேன். அது நாளடைவில் என் வாழ்க்கையில் நல்ல அறுவடையை கொண்டு வரும்.
விதைப்பின் காலத்திற்கும், அறுவடைக்கும் இடையில் காத்திருக்கும் இடைவெளி இருக்கிறது. வேர்கள் நிலத்தை ஊடுறுவி கீழே செல்கின்றன, அதற்கு நேரம் தேவை, அது நிலத்தடியில் நடைபெறுகிறது. தரையில் மேலே, எதுவும் நடைபெறாதது போன்றே காணப்படுகிறது.
நாம் கீழ்ப்படிதலின் விதைகளை ஊன்றிய பிறகு, எதுவும் நடக்காதது போல் நமக்கு தோன்றலாம். ஆனால் நம்மால் பார்க்க முடியாத இடத்தில் எல்லா வகையான காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதியாக ஒரு அழகான பச்சை இலையுடன் அந்த விதையானது நிலத்தின் அடியிலிருந்து வெடித்து முளைக்கும் போது, நம் கீழ்ப்படிதலின் விதையானது, இறுதியாக நம் வாழ்விற்காக தேவன் திட்டமிட்டு வைத்திருக்கும் அழகான அறுவடையாக உருவாகும்.
ஜெபம்
ஆண்டவரே, அறுவடைக்கு விதைக்கும் காலம் அவசியம் என்று அறிந்திருக்கிறேன். எனவே எதுவும் நடக்காததைப் போன்று தோன்றும் போது கூட, நான் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். சரியான நேரத்தில் நீர் என்னை என் அறுவடைக்கு கொண்டு வருவீர் என்பதை அறிந்து நான் உம்மை நம்புகிறேன்.