“மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” – கலா 6:7
நாம் எதை விதைத்தோமோ அதை அறுப்போம் என்று வேதம் தெளிவாய் கூறுகின்றது. இதை அப்படியே எடுத்துக் கொள்வோமெனில் இது பயிரிடுதலை குறிக்கிறது. அனேகர் இது பணத்தைக் குறிப்பதைப் பற்றியும், தாராளமாக இருப்பதைப் பற்றியும் குறிக்கிறது என்று அறிந்திருக்கின்றனர். ஆனால் இந்த விதியானது நாம் பிறரை நடத்தும் விதத்திற்கும் பொருந்தும் என்பதை அறிந்திருக்கின்றீர்களா?
நம் மனப்பான்மையும், வார்த்தைகளும் நாம் அனுதினமும் விதைக்கும் விதைகளாகும். அது நாம் எத்தகைய பலனை அல்லது அறுவடையை நம் சூழ்னிலைகளிலும், உறவுகளிலும் கொண்டிருப்போமென்பதை நிர்ணயிக்கிறது.
சாத்தான் நம்மை சுயனலமாக யோசிக்க வைப்பதிலும், உண்மையான நண்பர்களை முக்கியமில்லாதவர்களைப் போல் நடத்துவதிலும், நம் குடும்பங்களிலே சண்டையின் வார்த்தைகளை விதைப்பதிலும், நம் மேலதிகாரிகள், ஊழியர்களைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களை எண்ண வைப்பதிலும் இன்னும் இது போன்ற பல காரியங்களை செய்ய வைக்க விரும்புகிறான். ஒவ்வொரு உறவிலும் சூழ்னிலையிலும் தீய விதையை விதைக்கும் படி சாத்தான் விரும்புகிறான்.
நான் உங்களிடம் கேட்கட்டும், இன்று நீங்கள் எதை விதைக்கின்றீர்கள்? தேவனுடைய கிருபையால், அன்பை, மன்னிப்பை, தயவை, பொறுமையை, ஒவ்வொரு உறவிலும் சூழ்னிலையிலும் விதைக்க தெரிந்து கொள்ளுங்கள். தேவன், விரும்பும் படி நீங்கள் பிறரை நடத்தும் போது, உற்சாகமளிக்கும் தேவனுக்கேற்ற உறவுகளாலும், திருப்தியளிக்கும் பலன்களினாலும் நிறைந்த ஒரு வாழ்வை நீங்கள் அனுபவிப்பதைப் பார்ப்பீர்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, நான் நல்ல காரியங்களை விதைக்கவும், அறுக்கவும் விரும்புகிறேன். பிறருடன் சுயனலமாக நடந்து கொள்வதற்கு பதிலாக என் வாழ்விலுள்ள எல்லோருடனான என் உறவிலே அன்பையும், தயவையும் விதைக்க உதவுவீராக.