“அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.” – ரோமர் 10:11
எனக்கிருந்ததைப் போன்று ஒருவருக்கு கூச்ச சுபாவம் இருக்குமேயென்றால் அது அனேக சிக்கலான, உள்ளான பிரச்சினைகளாகிய (மனச்சோர்வு, தனிமை, தனிமைப்படுத்தல் மற்றும் அந்நியப்படுதல் போன்றவற்றிற்கு) ஊற்றாகவோ, வேராகவோ அமைந்து விடுகிறது. அனைத்து வகையான கோளாறுகளும் அவமானத்தில் வேரூன்றியுள்ளன: போதை பொருட்களை உட்கொள்ளுதல், மது அருந்துதல் மற்றும் பிற இரசாயன போதை மற்றும் உடல் பருமன் போன்ற உண்ணும் கோளாறுகள், அதிகமாக உணவு உட்கொள்ளுதல் அல்லது உட்கொள்ளாமலிருத்தல்;பணத்திற்கு அடிமையாதல், கஞ்சத்தனம் மற்றும் சூதாட்டம்; எல்லா வகையான பாலியல் விபரீதங்கள் போன்ற முடிவற்ற பட்டியல் எல்லாமே இந்த வெட்கத்தில் தான் வேர்கொண்டுள்ளது. சிலர் வேலைக்கு அடிமையாயிருப்பது வெட்கத்தின் விளைவாக இருக்கிறது. அளவுக்கு மீறி வேலைக்கு அடிமையாக இருப்பதால், வாழ்க்கையை ஒருபோதும் அனுபவிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் இரவும் பகலும் வேலை செய்யாவிட்டால், அவர்கள் பொறுப்பற்றவர்களாக உணர்கிறார்கள். உண்மையில், சிலர் என்னைப் போலவே இருக்கிறார்கள். அவர்கள் சந்தோசமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தால், அவர்கள் அதைப் பற்றி குற்ற உணர்ச்சியுடன் இருப்பார்கள்.
நான் செய்தது போல் நீங்களும் வேலைக்கு அடிமையாயிருப்பதோடு போராடலாம் அல்லது உங்களுக்கு வேறு அவமான அடிப்படையிலான போராட்டம் இருக்கலாம். செய்தி என்னவென்றால், அவமானம் நம்மை அழிக்கக்கூடும்.
ஆனால் நாம் அதை அனுமதிக்க வேண்டியதில்லை. நாம் கடவுளை நம்பி, நம்முடைய வாழ்க்கையை அவருக்குக் கொடுக்கும்போது, அவர் நம்முடைய அவமானத்தை நீக்குகிறார். இயேசு, பாவத்திலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்தவும், நம்முடைய தவறுகளை மூடவும் மரித்தார். இதனால் நாம் அவருடைய பிள்ளைகளாக கடவுளின் பிரசன்னத்தில் வாழ முடியும்.
அவமானம் உங்களைத் தாக்கினால், சத்தியத்தை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது: கடவுள் உங்களை நேசிக்கிறார், நீங்கள் அவரை விசுவாசித்து, அவரை சார்ந்து கொண்டு, அவரோடு இணைந்திருப்பீர்களேயென்றால், அவர் உங்கள் அவமானத்தை அகற்றுவார்.
ஜெபம்
ஆண்டவரே, நான் உம்மை நம்பும்போது, என் அவமானத்துடன் நான் வாழ வேண்டியதில்லை என்பதை நான் அறிவேன். உம்முடைய பிரசன்னத்திலே நான் விடுதலையோடு வாழும் படி அதை நீர் நீக்கி விடுகிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.