உங்கள் இருதயத்தை காத்துக் கொள்ளுதல்

உங்கள் இருதயத்தை காத்துக் கொள்ளுதல்

“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” – நீதி 4:23

நீதி 4:23 சொல்லுகிறதாவது. உங்கள் இருதயத்தை காத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அதுவே உங்கள் வாழ்க்கையின் பாதையை நிர்ணயிக்கிறது. இதைப்பற்றி சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கையிலே என்ன இருக்கின்றதோ அதுவே உங்கள் அனுதின வாழ்க்கையில் தென்படும். உள்ளே இருக்கிறதெல்லாம் நாளடைவில் வெளியே வந்துவிடும். அதை எல்லோரும் பார்க்க முடியும்.

நாம் எத்தகைய காரியங்கள் நம் இருதயங்களை வடிவமைக்க அனுமதிக்கிறோமோ, அதை அதிக முக்கியமானதாக மாற்றுகிறது. நான் அசிங்கமானது, பாவமானது, சுயநலமானது வெளியே வந்து பிறருடனான என் நல்லுறவை பாதிக்க விரும்பவில்லை. நீங்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

இருதயத்தை காத்துக் கொள்வது என்றால், உங்கள் எண்ணங்களை, வார்த்தைகளை, இயற்கை சுபாவத்தை, பொதுவான வெளிப்பாட்டை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை கற்றுக் கொள்வதாகும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது பொதுவாக நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதிலே வெளிப்படுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அது உங்கள் உணர்வுகளை பாதிக்கிறது, உங்கள் ஒட்டுமொத்த மனப்பான்மையில் தென்பட்டு விடுகிறது.

அனுதின வாழ்க்கையில் அதுவே நீங்கள் உங்கள் சூழ்நிலைகளை எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது – மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையில் நீங்கள் சமாதானமாக இருப்பீர்களா அல்லது உடைந்து போய் விடுவீர்களா என்பதை நிர்ணயிக்கிறது. நீங்கள் எப்படி பிறருக்கு பிரதியை செய்கிறீர்கள்? மனதுருக்கத்துடனும், விளங்கிக்கொள்ளுதலுடனுமா அல்லது நியாயந்தீர்த்து அகங்காரமாகவா – விசேஷமாக அவர்களுடன் நீங்கள் ஒத்து செல்லாமல் இருக்கும் போது.

உங்கள் உள்ளான நினைவுகள் உங்கள் வார்த்தைகளிலும் மனப்பான்மையும் மாற்றத்தை ஏற்படுத்துவதை தடுக்க முயற்சிக்கலாம். ஆனால் தேவனுக்கேற்ற சிந்தனைகளை கொண்டிருப்பதன் மூலம் இதை தொடங்குவது அதிக சுலபமானது என்பதை நான் கண்டறிந்திருக்கிறேன். தேவ பிரசன்னத்தில் நேரம் செலவிடுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தை அவரது நன்மையால் நிரப்பட்டும்.


ஜெபம்

ஆண்டவரே என் இருதயத்தை உம்மிடமிருந்து வரக்கூடிய சிந்தனைகளாலும், வாஞ்சைகளாலும் மட்டுமே நிரப்ப விரும்புகிறேன். பிரசன்னத்தில் அதிக நேரம் செலவழித்து உம்மேல் மட்டுமே என் கவனத்தை நான் வைக்கையிலே, என் இருதயம் மாறி, என் எஞ்சியிருக்கும் காலத்திலே தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வேன் என்று அறிந்திருக்கிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon