எங்களின் பெரிய ஆசை

எங்களின் பெரிய ஆசை

அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார். (ஏசாயா 49:10)

நாம், அவரை விரும்புவதை விட அதிகமாக, எதையும் விரும்புவதை, கடவுள் விரும்பவில்லை. நாம் பொருட்களை விரும்பக்கூடாது என்பதல்ல, நாம் அவரை விரும்புவதை விட அவற்றை அதிகம் விரும்பக்கூடாது என்பதுதான். நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவருடைய பிரசன்னத்தின் நிஜத்தில் நாம் வாழவும், அவர் யார் என்பதில் முழுமையாக திருப்தி அடையவும் அவர் விரும்புகிறார்.

இன்றைய வசனங்கள் ஒரு வழிகாட்டியைப் பற்றி பேசுகின்றன. நாம் உண்மையில் கடவுளுக்காக தாகமாக இருக்கிறோம். ஆனால் அவருக்காகத் தான் நாம் ஏங்குகிறோம் என்பதை நாம் உணரவில்லை என்றால், பாலைவனத்தில் தாகத்துடன் இருக்கும் பயணிகளை ஒரு வழிகாட்டி தவறாக வழிநடத்தும் விதத்தில், நாம் எளிதாக தவறாக வழிநடத்தப்படலாம். ஒருபோதும் திருப்தியடையாத விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், சாத்தான் நம்மை ஏமாற்றலாம். தேவனைத் தவிர வேறு எதுவும் நம்மைத் திருப்திப்படுத்த முடியாது. எனவே நாம் அவரைத் தேடுவதற்கு நம் மனதை மாற்ற வேண்டும். நம்முடைய ஆசைகள், எண்ணங்கள், உரையாடல்கள் மற்றும் தேர்வுகளில் அவருக்கு முதலிடம் கொடுத்தால், நம் தாகம் உண்மையிலேயே தணிந்து, நாம் வழிதவறாமல் இருப்போம்.

நமக்கு நியாயமான தேவைகள் உள்ளன, கடவுள் அவற்றைச் சந்திக்க விரும்புகிறார். நாம் அவருடைய முகத்தை (பிரசன்னத்தை) தேடினால், அவருடைய கரம் எப்போதும் நமக்குத் திறந்திருப்பதைக் காண்போம். இருப்பினும், நாம் உலக காரியங்களையே தேடினால், நாம் எளிதில் ஏமாற்றப்படலாம், மேலும் நம் வாழ்வின் பெரும்பகுதி வீணாகி விட்டதைக் காணலாம் – நமக்குத் தேவையானவை போல் தோன்றும் காரியங்கள், ஒன்றும் இல்லாததாய்ப் போகும்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கடவுள் வைத்திருக்கிறார்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon