தேவனுடைய எதிர்பார்ப்பில்லாத அன்பு

தேவனுடைய எதிர்பார்ப்பில்லாத அன்பு

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” – யோவான் 3:16

வேதாகமம் பல்வேறுவிதமான அன்பை பற்றி பேசுகிறது. கிரேக்கம் பதமாகிய ஃபிலியோ என்றால் ‘நட்பு அல்லது மிருதுவான சினேகம்’ என்று பொருள். பின்னர் ‘ஈராஸ்’ என்று ஒன்று இருக்கிறது. அது இளவயதினர் கவர்ச்சியின்பால் ஈர்க்கப்படுவதாகும். ஆனால் மூன்றாம் ரகம் – உன்னதமான ரகம் ஒன்றும் இருக்கிறது.

அகாப்பே (ஏதிர்பார்ப்பற்ற) என்பது தேவன் தம் குமாரனின் மீதும், மனித குலத்தின் மீது கொண்டிருக்கும் அன்பாகும். இந்த அன்பு தியாகம் செய்கிறது. யோவான் 3:16 ல் நாம் காணும் அன்பாகும். தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை கொடுக்கும் அளவுக்கு உலகத்தை நேசித்தார்.

இந்த தலைப்பின் கீழே அநேக வேத வாக்கியங்கள் இருக்கிறது. நீங்கள் அமர்ந்து தனிப்பட்ட முறையிலே இதனை படிக்க வேண்டும். இந்த அகாப்பே அன்பைப் பற்றி போதிக்கும் மற்றுமொரு வேதவாக்கியம் மத்தேயு 5:44 லே காணப்படுகிறது. இது நாம் நம் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்றும், நம்மை துன்புறுத்துகிறார்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றும் சொல்லுகிறது.

உங்களிடம் நன்றாக இருப்பவர்களுக்காக ஜெபிப்பது கடினம் அன்று. ஆனால் உங்களை காயப்படுத்தி அவர்களுக்காக ஜெபிப்பது உங்களை விரிவாக்குகிறது. ஆலயத்தில் உங்களுடைய நண்பர்களுடன் இருப்பது, பேசுவது எளிது. ஆனால் நிர்ப்பந்தமாணவராகவும், தனிமையாகவும் இருப்பவர்களை தேடிச்சென்று அவர்களுக்கு செவிமடுத்து கேட்பது கடினமானது. அது அகாப்பே அன்பு. நீதியானதை செய்ய உங்கள் சௌகரியத்தை தியாகம் செய்வது அது.

நீங்கள் மக்களுடன் பொறுமையாக இருப்பதின் மூலம் அவர்களை புரிந்துகொள்வதின் மூலமாகவும், உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை பேசுவதின் மூலமாகவும் உங்களால் சொல்ல இயன்றும் சில வார்த்தைகளை சொல்லாமல் இருப்பதின் மூலமாகவும் அன்பை மக்களிடம் காட்டலாம்.

மனிதர்களாக நாம் சுபாவத்தில் தன்னலம் உள்ளவர்களாகவும் ‘என்னைப் பற்றி என்ன’ என்று தொடர்ந்து கேட்கிறவர்களாகவும் இருக்கின்றோம். அன்பைக் கொண்டு சுயநலத்தின் மேல் போர் தொடுக்கும் நேரமிது. வேதவாக்கியம் அன்பை பற்றி என்ன சொல்லுகின்றது என்பதை படித்து விளங்கிக் கொள்கையிலே நாம் மக்களிடம் வேண்டுமென்றே அன்பாக இருக்க வேண்டும். உங்களுக்குள் இருக்கும் தேவனுடைய அகாப்பே அன்பானது பிறரிடம் நிரம்பி வழியட்டும்.


ஜெபம்

தேவனே, உம்முடைய வல்லமையான அகாப்பே அன்பானது ஆச்சரியமானது. நான் சுயநலத்தின் மேல் போர்தொடுத்து, நோக்கத்துடன் அகாப்பே அன்பு நிறைந்த வாழ்க்கையை வாழ தீர்மானம் எடுக்கும் போது என்னை பெலப்படுத்துவீராக.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon