முகத்திரையை எடுத்து விடுங்கள்

முகத்திரையை எடுத்து விடுங்கள்

“நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.” – 2 கொரி 3:18

அனேக வேளையிலே நாம் வெளியே ஒருவிதமாகவும், உள்ளே ஒரு விதமாகவும் நடந்து கொள்கிறோம். பெலவீனங்களும், குற்றங்களும், பயங்களும் நம்மை விரும்பப்படத்தகாதவராக மாற்றி விடுகின்றது. பெலவீனங்கள், குற்றங்கள் போன்ற காரியங்கள் நம்மிலே இருப்பதால் நாம் அதை பிறரிடமிருந்து மறைக்க விரும்பி, முகமூடிகளை அணிந்து கொள்கிறோம்.

முகமூடிகளை அணிந்து கொள்வதின் அபாயம் என்னவென்றால், அது நம்மை தவறாக பிரதிபலிக்கிறது. மற்றவர் பார்ப்பது பொய்யானது. அது நாம் யாராக இருக்கிறோம் அல்லது யாராக பிறந்தோமோ அப்படியாக இருப்பதில்லை. நாம் வெளிப்பிரகாரத்தை மாற்றிக் கொள்ளலாம் ஆனால் உள்ளே நாம் யாராக இருக்கிறோமோ அதை மாற்ற இயலாது. தேவன் மட்டுமே நம் இருதயத்தை மாற்ற இயலும்.

இப்போது நாம் எப்படியாக இருக்கிறோமோ அப்படியே தேவன் நம்மை நேசிக்கிறாரென்றும் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு ஒருபோதும் குறையாது என்றும் உணர வேண்டும். மற்றுமொரு நற்செய்தி என்னவென்றால் 2 கொரி 3:18லே தேவன் நம்மை மாற்றிக் கொண்டிருக்கிறாரென்றும், அவரைப் போன்று இன்னும் மாற்றுகிறாரென்றும், நாம் மூடி மறைக்க விரும்பும் தவறுகளையெல்லாம் சரி செய்து கொண்டிருக்கிறாரென்றும் பவுல் சொல்கிறார்.

உங்கள் முகத்திரையை எடுத்து விடும் அளவு அவரை நம்புங்கள். என்னைப் போலவே நீங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தேவனுடைய சாயலுக்கொப்பாக மாற்றம் அடைந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை கண்டு பிடிப்பீர்கள்.


ஜெபம்

தேவனே, நான் அனேக சமயங்களிலே பொருந்திக் கொள்ளவும், அங்கீகரிக்கப்படவும் முகத்திரையை அணிந்து கொள்கிறேன் என்று உணர்கிறேன். இன்று என்னுடைய அங்கீகரிப்பை உம்மிடத்திலே கண்டடைய தீர்மாணிக்கிறேன். நீர் உம்முடைய அன்பாலே என்னை மேற்கொள்கையில் உம்முடைய சாயலுக்கொப்பாக தொடர்ந்து என்னை மாற்றுவீராக.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon