“அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.” – கலா 6:4
நீங்கள் பிறருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் தேவன் நாம் விரக்தியடைந்தாலும், அவர் நமக்கு கொடுக்க விரும்பும் ஆசீர்வாதங்களுக்கு தகுதியற்றவர்களாகி விட விரும்புகிறதில்லை.
நம் வாழ்க்கையை மற்றவர்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுக் கொள்வது அவர்களுக்கும் நமக்கும் அன்னியமானது. ஏனென்றால் அவர்கள் கொண்டிருப்பதையோ, அவர்கள் என்ன அறிந்திருக்கிறார்களோ அதைப் பற்றியோ அவர்கள் எப்படி தோன்றுகிறார்களோ அதைப் பற்றியோ இப்படி பலவற்றைப் பார்த்து பொறாமைப்படும் போது அவர்களை நாம் வெறுக்க தொடங்குவோம். பின்னர் தேவன் அவர்களை எப்படி அற்புதமாக செய்திருக்கிறாரென்பதை பாராட்ட இயலாமல் போய் விடும்.
அது நமக்கு அன்னியமானது. ஏனென்றால் நம் வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டத்தை அது மட்டுப்படுத்தி விடுகின்றது. ஒப்பிடுவது தேவனிடம் ‘என் வாழ்க்கையிலே உம்முடைய கிரியை இப்படியாக இருக்கட்டும். இந்த நபரைப் போன்று நான் இருக்கவே விரும்புகிறேன்’ என்று சொல்லுகிறது.
ஆனால் ஒவ்வொருவருக்கும், ஒரு தனிப்பட்ட திட்டத்தை வைத்திருக்கிறார். உங்களுக்காக அவர் கொண்டிருக்கும் திட்டம் உங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. மற்றவருக்கான அவருடைய திட்டத்தை பார்ப்பதை நிறுத்துங்கள். அதனால் உங்களுக்கான அவருடைய திட்டத்திலே நீங்கள் நடந்து, அவை கொண்டு வரும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வீர்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே என்னுடைய இருதயத்தை நேர்மையாக ஆராய எனக்கு உதவுவீராக. என்னைப் பிறருடன் ஒப்பிட்டுக் கொண்டிருப்பதால் பொறாமை, வெறுப்பு அல்லது விரக்தி ஏதாவதொன்று வளர்ந்திருக்குமேயென்றால் அதை வெளிப்படுத்துவீராக. நான் எப்படியாக இருக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோ அப்படியாக இருக்கவும், எனக்காக நீர் கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழவும் விரும்புகிறேன்.