எப்போதும் கிடைக்கும்

நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள். (சங்கீதம் 140:13)

பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழ்கிறார் என்பது, நமக்குத் தேவைப்படும் போது நம்மிடம் பேசுவதற்கும், நமக்கு உதவுவதற்கும் எப்போதும் தயாராக இருப்பதற்கான அவரது விருப்பத்தை நிரூபிக்கிறது. நாம் ஆவிக்குறிய வாழ்க்கையில் தொடர்ந்து வளரும்போது, சோதனையை அனுபவிப்போம், ஆனால் அதை எதிர்ப்பதற்கும், தவறான தேர்வுகளுக்குப் பதிலாக சரியான தேர்வுகளைச் செய்வதற்கும் கடவுள் நமக்கு பரிசுத்த ஆவியைக் கொடுத்துள்ளார்.

ஆயினும் கூட, எந்த மனிதனும் சரியானவன் அல்ல, நாம் தவறு செய்வோம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலம், தேவனுடைய மன்னிப்பு எப்போதும் நமக்குக் கிடைக்கிறது. இந்த மன்னிப்பைப் பெறுவது நம்மைப் பலப்படுத்துகிறது மற்றும் கடவுளுடன் தொடர்ந்து முன்னேறுவதற்கு உதவுகிறது. இது நம் இருதயத்தை சமாதானப்படுத்துகிறது, நம்மை விடுவிக்கிறது, மேலும் தேவனுடைய சத்தத்தை தெளிவாக கேட்க உதவுகிறது.

நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும், தோற்கடிக்கப்பட்டதாகவும், கண்டிக்கப்பட்டதாகவும் உணருவது நம்மை பலவீனப்படுத்துகிறது. நமது ஆற்றலைப் பயன்படுத்தி, நம்மைப் பற்றி தவறாக எண்ணுவதற்கு பதிலாக, தேவனுடைய சத்தத்திற்கு நம் இருதயம் இசைவாய் இருப்பதை உறுதி செய்ய அதைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவர் நம்மை அதிக வலிமை மற்றும் அவருடனான ஆழமான உறவுக்கு அழைத்துச் செல்கிறார். அவருடைய மன்னிப்பும், அவருடைய பிரசன்னமும் பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு எப்போதும் கிடைக்கும். இன்று நீங்கள் கடவுளைத் தேடும்போது, அவருடைய அன்பையும், இரக்கத்தையும் பெற்றுக் கொள்ள உங்களை ஊக்குவிக்கிறேன். அவரது கைகள் திறந்தே இருக்கும், அவர் உங்களுடன் நேரத்தை செலவிட காத்திருக்கிறார்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: பரிசுத்த ஆவியானவர் எப்போதும் உங்களுக்குக்காக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon