இயேசுவை அறிந்து கொள்வது என்பதை கற்றுக் கொள்ளும் போது, உங்கள் வாழ்க்கையில் கடவுளுடைய திட்டத்துடன் ஒரு அற்புதமான வாழ்க்கையை தொடங்குகிறீர்கள். ரோமர் 3:23 இப்படி சொல்கிறது. “எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி,” இயேசுவை அறிந்து கொள்வது என்பது அவர் எப்படி உங்களுக்குத் தேவை என்பதை ஒப்புக் கொள்வது, அவர் உங்களுக்கு என்ன செய்தார் என்பதை நம்புவது, அவருடைய ஒப்பற்ற பரிசுப் பொருளைப் பெற்றுக் கொள்வது. உங்களுடைய சொந்த முயற்சியில் உங்கள் வாழ்க்கையை வாழ முடியாது, நீங்கள் பாவம் செய்து விட்டீர்கள் ஆகவே உங்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதை உணர்ந்து கொள்வதாகும்.
அப்படி நீங்கள் இரட்சிக்கப் பட்டு விட்டீர்கள் என்பதை உணரும் பொழுது அந்த கணப்பொழுதில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் நிகழும். நீங்கள் உங்களுடைய எல்லா மோசமான பாவ செயல்களையெல்லாம் அவரிடம் கொடுத்து விடுவீர்கள். பதிலுக்கு ஆண்டவர் உங்களுக்காக என்ன வைத்திருக்கிறாரோ அதைக் கொடுப்பார். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம் ஆனால் உங்களைப் பற்றிய தேவனுடைய திட்டம் மிகவும் அருமையானது. அதுவே உங்கள் பயணத்தின் முதற்படி.
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரன விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” – யோவான் 3:16