உனக்கு நம்பிக்கையும் எதிர்காலமும் உண்டு

உனக்கு நம்பிக்கையும் எதிர்காலமும் உண்டு

எரேமியா 29:11 “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும் படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.”

உன்னுடைய வாழ்க்கையைக் குறித்து தேவன் ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இல்லையா?. வழியில் என்ன நடந்தாலும், எப்படிப்பட்ட தவறான அடிகளை வைத்தாலும், தேவன் உங்களை இப்பொழுது வரை வழிநடத்திக் கொண்டு வருகிறார். அவருக்கு நேராகவே உங்களை வழினடத்துகிறார். உங்களுடைய எதிர்காலமும் நம்பிக்கையும் அவருக்குள் இருக்கிறது.

அப்படியானல் நீங்கள் உங்கள் முழுவாழ்க்கையையும் இயேசுவுடன் வாழலாம். அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை என்று வாக்குப்பண்ணியிருப்பதால் நீங்கள் புத்துணர்வு அடைய ஏதுவாயிருக்கிறது!

இது ஒரு பயணம்: வாழ்க்கை முழுவதற்குமான செயல்முறை

கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதற்கு இப்பொழுது நான் என்ன செய்தேன் என நீங்கள் கேட்கலாம். அது ஒரு நல்ல கேள்வி. நீங்கள் உங்கள் முதல் அடியை எடுத்து வைத்துள்ளீர்கள். இன்று நீங்கள் ஒரு மாற்றத்தைக் காண முடியாவிட்டாலும் கிறிஸ்து உங்களுக்குள் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கொலோ 2:6-7 இவ்விதம் சொல்கிறது. “ஆகையால் நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக் கொண்ட படியே, அவருக்குள் வேர் கொண்டவர்களாகவும், அவர் மேல் கட்டுப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்து கொண்டு, நீங்கள் போதிக்கப்பட்ட படியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.” அந்த வேர்கள் ஜெபத்தின் மூலமும், தேவனுடைய வார்த்தையை படிப்பதின் மூலமும், பரிசுத்த ஆவியானவரை நம்முடைய வாழ்க்கையை வழிநடத்த அனுமதிப்பதின் மூலமும்  நிலைவரப்படுகிறது.

கிறிஸ்துவுடன் உங்கள் வாழ்க்கையைத் தொடங்குவது

தேவனுடைய வாக்குத்தத்தமும் இயேசு அவருடைய சீஷர்களுக்கு சொன்னதும் இது: “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப் படவும் வந்தேன்” – யோவான் 10:10

கிறிஸ்துவுக்குள் முழுமையான புத்துணர்வான வாழ்க்கை வாழ அழைக்கப்பட்டீர்கள். உங்கள் பயணத்தைப் பெலனோடு தொடங்குங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon