கிறிஸ்துவின் அன்பை முழுவதுமாக புரிந்து கொள்வது மிகப் பெரியது என்றாலும் அதை நீங்கள் அனுபவிப்பீர்களாக. அப்போது நீங்கள் தேவனிடமிருந்து வரும் வல்லமை மற்றும் ஜீவனின் நிறைவினாலே முழுமையாக்கப்படுவீர்கள். – எபே 3:19
எங்களுடைய திருமணத்தின் ஆரம்ப நாட்களில், நானும் என் கணவர் டேவும், சில கஷ்டமான வருடங்களை அனுபவித்தோம். அவற்றில் பெரும்பாலானவை என் கடந்த காலத்திலே, நான் என் தகப்பனால் வார்த்தைகளாலும், உணர்ச்சிகளாளும், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதின் விளைவாகவே இருந்தது. பல கடினமான தருணங்கள் மற்றும் கண்ணீரினூடே பழி வாங்குவதற்கு பதிலாக மன்னிக்க தெரிந்து கொண்டதன் மூலம் அதிலிருந்து வெளியே கொண்டு வந்ததோடு, என் சாட்சியை பிறர் வாழ்விலே சுகத்தை கொண்டுவர உபயோகிக்கிறார்.
உங்கள் கடந்தகால காயங்களிலிருந்து தேவன் உங்களை சுகமாக்கும் போது அவர் உங்களுக்கு உதவ மட்டும் விரும்புவதில்லை. ஆனால் அதே சுகமாக்குதலை பிறரும் அனுபவிக்க நீங்கள் ஒரு வாசலாக இருப்பதையும் விரும்புகிறார்.
நாளடைவில் நானும், டேவும், என் பெற்றோரை நாங்கள் இருந்த இடமாகிய செயின்ட் லூயிஸ்க்கு அழைத்து வந்து அவர்கள் வசிக்க ஒரு வீட்டை வாங்கிக் கொடுக்கும் ஒரு நிலைக்கு தேவன் எங்களை கொண்டு வந்தார். அப்படி செய்வது எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. ஆனால் என் தகப்பனோ எனக்கு செய்த எல்லாவற்றிற்காகவும் என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். கிறிஸ்துவையும் தன் வாழ்க்கையிலே ஏற்றுக்கொண்டார்.
நான், தேவன் என்னை மன்னிப்பின் வல்லமையால் குணப்படுத்த அனுமதித்து என் மறுசீரமைப்பின் மூலம் என் தகப்பனை சுகமாக்க அனுமதித்தால், ஒரு புதிய அளவிலான ஆரோக்கியத்தை என் உணர்ச்சியில் உணர்ந்தேன்.
நாம் அனைவருமே பல்வேறு விதங்களில் மனக் காயம் அடைந்திருக்கலாம். தனிமை, ஏமாற்றம், பயம், பாதுகாப்பின்மை போன்றவை நம்மை ஆழமாக காயப்படுத்த கூடும். தேவனுடைய அன்பை நான் பெற்றுக்கொண்டு, அதை எல்லாம் அவர் மாற்ற நான் அனுமதிக்கும் வரை என்னுடைய மனக்காயங்களை கடந்துசெல்ல இயலாதவளாக இருந்தேன். உங்கள் மனக்காயங்களை, வேதனைகளை தாண்டி நீங்கள் முன் சென்று பிறரை நேசிக்கவும், பிறரை மன்னிக்கவும் கற்றுக்கொள்ளும் முன்பாக, நீங்கள் தேவனுடைய அன்பை அனுபவிக்க வேண்டும்.
உங்கள் கடந்த காலத்தோடு போராடும்போது தேவன் உங்களை ஆழமாக நேசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மிகவும் பெரிதாக இருக்கும், முழுவதுமாக விளங்கிக் கொள்ள இயலாததாக இருக்கும் கிறிஸ்துவின் அன்பை நாம் அனுபவித்ததால்தான் நாம் முழுமையாக இருக்கிறோம் என்று வேதம் சொல்லுகிறது. அவருடைய அன்பை நீங்கள் பெற்றுக் கொள்ளும்போது சுகமாகுதல், குணப்படுதல் உங்கள் இருதயத்தில் தொடங்கும். அவருடைய முழுமையான ஜீவனால் நீங்கள் முழுமையாக்கப் படுவீர்கள்.
ஜெபம்
தேவனே, என்னுடைய கடந்த காலத்தின் காயங்களையும், வலிகளையும் மேற்கொள்ள எனக்கு உதவுவீர் என்று நம்புகிறேன். என்னுடைய குணங்களை பிறருக்கு உபயோகிப்பீர் என்றும் நம்புகிறேன். கிறிஸ்துவினுடைய அன்பை நான் அனுபவிக்க எனக்கு உதவும். உம்முடைய ஜீவன் மற்றும் வல்லமையின் முழுமையால் என்னை முழுமையாக்குவீராக.