“நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.” – 1 கொரி 15:31
சுயநலமானது நாம் கற்றுக் கொண்ட நடத்தையன்று. நாம் அப்படியாகவே பிறக்கின்றோம். ஆனால் நாம் இயேசுவை நம்முடைய இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது, அவர் நம் ஆவியிலே வாழும் படி வருகின்றார். நாம் எப்படி சுயத்திற்கு சாவது என்று கண்டு கொண்டு பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலைப் பின்பற்றும் போது சுயநலத்தை நாம் மேற்கொள்ளலாம். அது ஒரு போதும் முற்றிலுமாக போய் விடாது. ஆனால் நமக்குள்ளே வாசம் பண்ணும் தேவன் நாம் அனுதினமும் அதை மேற்கொள்ள நமக்கு உதவுகிறார். (கலா 5:16).
இப்போதும் நான் சுயநலத்தை முழுவதுமாக மேற்கொள்ளவில்லை, அப்படி எவரும் இருப்பது சந்தேகமே. இவ்வுலகில் வாழ்ந்த மிகப்பெரிய கிறிஸ்தவர்களுள் ஒருவரான அப் பவுல் கூட சுயநலத்தை மேற்கொள்வதிலே சில பிரச்சினைகள் இருந்தது. அவர் ஒவ்வொரு நாளும் சுயத்திற்கு சாக வேண்டும் என்று சொன்னார்.
நாமும் இதே போன்ற வாழ்க்கைகுத்தான் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால் நாம் சுயநலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நாம் சுயத்திற்கு ஒவ்வொரு நாளும் மரிக்க வேண்டும். அப்படி செய்வது சுலபமானதல்ல. ஆனால் நாம் தேவனை சார்ந்து கொள்ளும் போது சரியானது எதுவோ அதை செய்ய தேவன் எப்போதுமே கிருபை அளிப்பார். உண்மையென்னவென்றால், ஒவ்வொரு நாளும் அதிகப்படியான நீதி, சமாதானம், சந்தோசத்தைப் பெற்றுக் கொள்ள சுயநலமற்று வாழ்வதே சிறந்த வழியாகும்.
ஜெபம்
தேவனே, நான் பரிபூரணமானவனல்ல. ஆனால் ஒவ்வொரு நாளும் நீர் எனக்கு அருளும் பெலத்தால் சுயத்திற்கு என்னால் சாக இயலும். நீர் உம்முடைய வாழ்வை என் மூலமாக வாழ்வதற்காக, சுயநலத்தை எப்படி மேற்கொள்வது என்பதைக் காட்டுவீராக.