
“பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று.” – 1 இராஜாக்கள் 19:12
நம் வாழ்வில் சமாதானத்தைக் காண, ஒவ்வொரு நாளும் தேவன் நமக்குக் கொடுக்கும் தூண்டுதலுக்குக் கீழ்ப்படிய வேண்டும். தூண்டுதல் என்பது உள்ளத்தின் ஆழத்திலே நாம் என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து வைத்திருப்பதாகும். 1 இராஜா 19:12, இந்த அறிவை மெல்லிய குரலென்று குறிப்பிடுகிறது. ஒரு தூண்டுதல் என்பது ஒரு சுத்தியலால் தலையில் அடிப்பதன்று!
1 இராஜாக்களின் புத்தகத்திலே, எலியாவைத் தூண்டுவதற்கு, தேவன் பெரிய மற்றும் வலுவான காற்றையும், பூகம்பத்தையும் நெருப்பையும் பயன்படுத்தவில்லை. அவரது சத்தமானது மென்மையான அமைதியின் சத்தமாகவும், சிறிய குரலாகவும் எலியாவுக்கு வந்தது. ஒரு தூண்டுதலானது, உண்மையில், தேவன் அனேக சமயங்களிலே உங்கள் காதுகளில் பேசி வழிநடத்துவதை விட, உங்கள் இருதயத்தில் பேசியே வழிநடத்துகிறார்.
நாம் தேவனைக் கேட்பதற்கும் அவர் சொல்வதை செய்வதற்கும், கற்றுக் கொண்டால், காரியங்கள் நமக்கு நன்றாக இருக்கும் என்பதைக் கண்டுபிடிப்போம். சூழ்னிலை எப்படி இருப்பினும், நாம் தேவனுக்கு செவிசாய்த்து அவரது சத்தத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். சில காரியங்களைச் செய்ய சொல்லி தேவன் உங்களிடம் கேட்கும் போது, அதன் காரணங்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அவருடைய குரலைக் கேட்டு, அவருடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படியும்போது, நீங்கள் அவருடைய சமாதானத்திலே இளைப்பாற முடியும். எனவே கேளுங்கள்!
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, ஒவ்வொரு நாளும் என் இருதயத்தில் உம்முடைய தூண்டுதல்களை உன்னிப்பாகக் கேட்க எனக்கு உதவும். நான் உம்முடைய சமாதானத்தை விரும்புகிறேன், எனவே நான் உமக்கு செவிசாய்க்க விரும்புகிறேன்.