அறிக்கையிடுவதின் மறைவான வல்லமை

“என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.” – எரேமியா 23:29

“அறிக்கை” என்ற வார்த்தையை கேட்கும் போது பொதுவாக நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அநேகர் எதிர்மறையான விளக்கத்தை அளிக்கும் கூற்றாகிய ஏதோ தவறை செய்துவிட்டேன் என்று ஒப்புக் கொள்ள கட்டாயப்படுத்துவது பற்றி நினைப்பார்கள். ஆனால் தேவ வார்த்தையோடு ஒத்து சென்று அதை உரக்க அறிக்கை செய்யும் போது அதன் விளைவு எப்போதுமே நேர்மறையாகவே இருக்கிறது.

எனக்கு அறிமுகமான ஒருவர்,  நாம் வாயை மூடிக்கொண்டு கோலியாத்தை தோற்கடிக்க இயலாது, என்று சொல்வார். தாவீது, அரக்கனான கோலியாத்தோடு போராட தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருந்தபோது அவன் அந்தப் போரின் முடிவு என்னவாக இருக்கும் என்று நம்பினானோ, அதை அறிக்கையிட்டுக்கொண்டு, அவனை நோக்கி ஓடினான். இன்று தேவன் உன்னை என் கையிலே கொடுக்கப் போகிறார்… (1 சாமுவேல் 17:46).

நம் வாழ்வில் இருக்கும் எதிரிகளை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். தேவனுடைய வார்த்தையோடு ஒத்துச் செல்லாத எண்ணம் உங்கள் மனதில் தோன்றும் ஒவ்வொரு முறையும், தேவனுடைய வார்த்தையின் உண்மையை உரக்க அறிக்கையிடுங்கள். அந்த வார்த்தையின் வல்லமையானது பொய்யை மேற்கொள்வதை காண்பீர்கள்.

ஜெபம்

தேவனே, உம்முடைய வார்த்தையானது வல்லமையானது என்பதை அறிந்திருக்கிறேன். ஒன்றும் அதற்கு எதிராக நிற்காது. ஒவ்வொரு முறையும் நான் என்னை ஒரு கடினமான சூழ்நிலையை காணும்போது, உம்முடைய வார்த்தையை உரக்க அறிக்கையிட எனக்கு நினைவுறுத்தும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon