“அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.” – ரோமர் 8:15
கிறிஸ்தவர்களாக, கிறிஸ்துவின் மகிமையை பகிர்ந்து கொள்வதை விரும்புகிறோம். ஆனால் அவருடைய பாடுகளில் பங்கெடுப்பது பற்றி என்ன? இயேசுவின் தியாகம் நமக்கு இந்த பூமியில் இருக்கும்போது அபரிவிதமான வாழ்வையும் நித்திய ஜீவனையும் கொடுக்கிறது. ஆனால், அவருடைய மகிமையில் நாம் பங்குபெற வேண்டுமானால், நாம் சோதனைகளையும் அனுபவிக்க வேண்டும் என்று வேதம் நமக்கு கற்பிக்கிறது. இது தகுதியானது தானா? ரோமர் 8:18-ன் படி, நிச்சயமாகவே!
நம்முடைய சூழ்நிலைகளால் தான் நாம் பாதிக்கப்படுகிறோம் என்றும், அவை மாறினால் மட்டுமே, நாம் சரியாக செயல்பட முடியும் என்று நம்புகிறோம். ஆனால், நாம் மிகவும் முதிர்ச்சியடைந்தவர்களாகவும், நிலையானவர்களாகவும் மாற வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். இதனால் நாம் சூழ்னிலைகள் நன்றாக இல்லாமல் இருக்கும் போதும் சரியாக நடந்து கொள்வோம். விசுவாசத்தில் வெவ்வேறு நிலைகள் உள்ளன, பெரும்பாலான நேரங்களில் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட நம் விசுவாசத்தைப் பயன்படுத்த விரும்புகிறோம். ஆனால் சில சமயங்களில் கடவுளின் திட்டம், வாழ்க்கையின் சவால்களின் மூலம் நம்மைச் நடத்திச் செல்லும் உயர்ந்த அளவிலான விசுவாசத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே.
பெரும்பாலான சமயங்களில் நாம் தேவனுடைய விடுவிக்கும் வல்லமையைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். ஆனால் அவருடைய நிலைத்திருக்க செய்யும், பெலப்படுத்தும், ஊக்குவிக்கும் வல்லமையை மேலோட்டமாக பார்க்கின்றோம். யோவான் 16:33 ல் இயேசு, வாழ்க்கையின் சோதனைகளின் போது, அவர் நமக்கு சமாதானத்தையும், அவற்றை மேற்கொள்ள தேவையான வல்லமையையும் கொடுப்பதாக வாக்கு பண்ணியிருக்கிறார். இன்று நீங்கள் பாடுகளின் மத்தியில் கடந்து சென்று கொண்டிருந்தால், தைரியமாயிருங்கள். ஏனென்றால் கிறிஸ்துவுக்குள்ளாக, நீங்கள் அதனூடே கடந்து வந்து அவருடைய மகிமையில் பங்கு பெறுவீர்கள் என்று நான் உங்களை ஊக்குவிக்கிறேன்!
ஜெபம்
ஆண்டவரே, ரோமர் 8:18 கூறுகிறது, உம்மோடு நடப்பதன் மூலம் வரும் மகிமையுடன் ஒப்பிடும்போது, எனது தற்போதைய பாடுகள் ஒன்றுமில்லை. நான் அதே மனப்பான்மையை பெற்றுக் கொண்டிருக்க விரும்புகிறேன். என் பாதையில் வரும் எந்தவொரு துன்பத்தையும் கடந்து செல்ல நீர் கொடுக்கும் அமைதிக்காகவும், வல்லமைக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.