அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். – மத் 25:40
நான், ஒரு முறை ரஷ்யாவில் நடந்து சென்று இயேசு உங்களை நேசிக்கிறார், இயேசு உங்களை நேசிக்கிறார்” என்று சொல்லிக்கொண்டிருந்த ஒரு சுவிசேஷகரை பற்றிய கதையை கேட்டேன். அவர் சுவிசேஷ பிரதிகளை கொடுத்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு பெண்மணி, உங்கள் பிரசங்கங்களும், சுவிசேஷ பிரதிகளும் என் வயிற்றை நிரம்பாது என்று அறிவீர்களா? என்று கேட்டாள்.
இந்த கதையானது ஒரு முக்கியமான கருத்தை சொல்கிறது. சில சமயங்களிலே நாம் மக்களுக்கு அவர்களுடைய தேவைகளை சந்திப்பதின் மூலம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்தி பின்னர் கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தை பிரசங்கிக்கலாம்.
இயேசு மக்களின் சரீர பிரகாரமான தேவைகளை சந்திப்பதின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். மத்தேயு 25 லே, அவர் நான் பசி உள்ளவர்களுக்கு உணவு கொடுக்கும் போதும், தாகமாய் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் போதும், உடையற்றவர்களை உடுத்துவிக்கும் போதும், நோயுற்றவர்களை கவனிக்கும் போதும் அதையெல்லாம் நாம் அவருக்கே செய்தது போல் ஆகின்றது என்று சொல்கிறார். அவர் எப்படி ஒருவருக்கு நடைமுறையான வழிகளிலே உதவி செய்வது, அவர்களுடன் சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ள ஒரு அற்புதமான சிலாக்கியத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது என்று காண்பித்தார்.
ஒருவர் தேவனுடைய அன்பை அவர்களது வாழ்விலே நடைமுறையாக பார்க்கும்போது, தேவன் நேசிக்கிறார் என்ற செய்தியை நம்புவது அவர்களுக்கு எளிமையாகி விடுகின்றது.
எனவே நடைமுறை ரீதியாக இது எப்படி தோன்றுகிறது? நேசிக்க படாதவராக உணர்பவர்களுக்கு ஒரு தழுவலை கொடுப்பது போன்ற சிறிய செயல்களில் தொடங்கலாம். அங்கே இருந்து நோயுற்றவர்களுக்கு, தாகமாய் இருப்பவர்கள், பசியோடு இருப்பவர்கள் போன்றோரை தாங்கும் ஊழியங்களை நீங்கள் தாங்கலாம். உங்கள் சமூகத்திலே அருட்பணி தன்னார்வலராக இணைந்து கொள்ளலாம். பிற நாடுகளில் இருப்பவருக்கு ஊழியம் செய்ய, ஊழிய பயணங்களை மேற்கொள்ளலாம். மட்டுமன்றி நடைமுறை செயல்களால் பிறருக்கு சேவை செய்ய தீர்மானிப்பீர்களென்றால் எண்ணற்ற முறைகள் அதற்காக உண்டு.
ஜெபம்
தேவனே, நான் என் வார்த்தைகளுக்கு பின் செயல்பட விரும்புகிறேன். என் வாழ்க்கை பாதையிலே நீர் கொண்டு வரும் மக்கள் அன்பின் வல்லமையை அனுபவிக்கும் வகையிலே நடைமுறைக்கு ஏற்ப அவர்களுக்கு நான் எப்படி உதவுவது என்பதை எனக்கு காண்பித்தருளும்.