உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா? (மத்தேயு 7:9-10)
சரியான விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் நாம் எப்போதும் புத்திசாலியாக இருப்பதில்லை, ஆனால் இன்றைய வசனம் நாம் அப்பத்தைக் கேட்டால், கடவுள் நமக்கு ஒரு கல்லைக் கொடுக்க மாட்டார், மேலும் நாம் மீனைக் கேட்டால், அவர் நமக்கு பாம்பைக் கொடுக்க மாட்டார் என்று சொல்லுகிறது. நாம் அப்பத்தைக் கேட்கிறோம் என்று நினைக்கும் நேரங்கள் உள்ளது. உண்மையில் நாம் ஒரு கல்லைக் கேட்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சரியானது என்று நாம் உண்மையிலேயே நம்பும் ஒன்றை நாம் கேட்கலாம், ஆனால் அத்தகைய கோரிக்கையை வழங்குவது அவர் நமக்கு வழங்கக்கூடிய மிக மோசமான காரியமாக இருக்கும் என்று கடவுள் அறிந்திருக்கிறார்.
நம்மை அறியாமலேயே நமக்கு ஆபத்தான அல்லது மோசமான ஒன்றைக் கேட்கும் திறன், நம்மிடம் உள்ளது. அப்படியானால், கடவுள் அதை நமக்குத் தரவில்லை என்பதில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்! அப்படிப்பட்ட சமயங்களில், அந்தக் கோரிக்கைக்கு கடவுள் “ஆம்” என்று சொல்வது, பாம்பை வீட்டிற்குள் அனுமதிப்பது போல் இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. “கடவுளே, உம்மிடம் எதையும் கேட்கும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” ஆனால் உமது விருப்பமில்லாத எதுவும் எனக்கு வேண்டாம். மேலும் நான் உம்மை நம்புகிறேன், கடவுளே. நான் அதைப் பெறவில்லை என்றால், நேரம் சரியாக இல்லை என்பதை நான் அறிந்துகொள்வேன் அல்லது எனக்கு அதை விட நல்லது ஏதாவது உம்மிடம் உள்ளது என்பதை நான் அறிவேன். நான் இனி மேலும் அதைக் கேட்க நினைக்கவில்லை என்று சொல்லுங்கள். நீங்கள் விரும்பும் அனைத்தையும் கடவுள் உங்களுக்கு வழங்காததால், ஒரு மோசமான அணுகுமுறை உங்களைப் பற்றிக் கொள்ள ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
நாம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். நாம் விரும்புவதை மட்டுமல்ல, நமக்கு எது சிறந்தது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் கடவுளை உண்மையாக நம்பினால், அவர் நம் கோரிக்கைகளுக்கு “இல்லை” என்று கூறும் போது நாம் அவரை “ஆம்” என்று கூறும் போது நம்புவது போல் நம்ப வேண்டும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள், “இல்லை” என்று சொல்லும் போதும், “ஆம்” என்று சொல்லும் போதும், கடவுளை நம்புங்கள்.