
“என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.” – சங்கீதம் 25:20
ஒவ்வொரு நாளும் நாம் இரண்டு விதமான வெட்கத்தை / இலட்சையை சந்திக்கின்றோம். அதில் வேறுபாட்டை நாம் அறிந்து கொள்வது அவசியமானது.
சாதாரணமான, ஆரோக்கியமானதொரு வெட்கம் உள்ளது. உதாரணமாக ஒருவருக்கு சொந்தமான ஒரு பொருளை நான் உடைத்து விட்டாலோ, தொலைத்து விட்டாலோ என்னுடைய தவறை பற்றி நான் ஏமாற்றமாக உணர்கிறதுண்டு. நான் அவ்வளவு கவலையீனமாகவும், உதாசீனமாகவும் இருந்திருக்க கூடாது என்று நினைப்பதுண்டு. நான் அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் நான் அதற்காக மன்னிப்பு கேட்டு, அதை பெற்றுக் கொண்டு என் வாழ்க்கையை தொடரலாம்.
ஆரோக்கியமான இலட்சையானது நாம் பரிபூரணமற்ற பெலவீனங்கள், இயலாமைகள் கொண்டிருக்கும் மனிதர்கள் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. நமக்கு தேவன் என்பதை அது நினைவுறுத்துகிறது.
துரதிஷ்டவசமாக ஆரோக்கியமான வெட்கமானது அதோடு நின்றுவிடாமல் இருக்கும்போது, அது ஆரோக்கியமற்றதாகவும், விஷமானதாகவும் மாறி விடுகின்றது. ஒருவன் மன்னிப்புக் கோராமலும், அதை பெற்றுக் கொள்ளாமலும் இருக்கும்போது, அவர்கள் தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்ளக்கூடும். அவர்கள் யாராக இருக்கிறார்களோ அதை வெறுக்க தொடங்குவர்.
இந்த நிலையில் உங்கள் வாழ்க்கையை கழிக்காதீர்கள். தேவனுடைய சுதந்திரமாகவும், பிள்ளையாகவும் இருக்கும் உங்கள் சரியான நிலையை நினைத்துக்கொள்ளுங்கள் (ரோமர் 8:17). ஆரோக்கியமற்ற இலட்சையானது கிறிஸ்துவுக்குள் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதை மறக்கும் படி செய்கின்றது. ஆனால் ஆரோக்கியமான இலட்சையானது, அவர் இல்லாமல் நீங்கள் ஒன்றும் இல்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறது. இன்று இதன் வித்தியாசத்தை தேவன் உங்களுக்கு காண்பிக்கும்படி கேளுங்கள்.
ஜெபம்
தேவனே, ஆரோக்கியமற்ற இலட்சையின் பாரத்தோடு நான் வாழ விரும்பவில்லை. நீர் என்னை எவ்வளவாக நேசிக்கிறார் என்பதை நினைவில்கொள்ள எனக்கு உதவுவீராக. நீர் என்னை மன்னித்திருப்பதால், நான் என்னை தண்டித்து கொள்ள தேவையில்லை.