“கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.” – கலா 5:6
எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன், நாம் அவரிடமும், பிறரிடமும் உண்மையான, பரிசுத்தமான அன்பைக் கொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகிறார். நம் வாழ்விலே ஒரே ஒரு காரியத்தை மட்டும் கொண்டிருக்க முடியும் என்றால், அது பிறரை நேசிப்பதாக இருக்க வேண்டும்.
அனேகர் ஆவிக்குறிய முதிர்ச்சியின் முதல் அடையாளம் விசுவாசம் என்று நினைக்கின்றனர். ஆனால் நானோ அன்பிலே நடப்பது தான், ஆவிக்குறிய முதிர்ச்சியின் உண்மையான பரீட்சை என்று நம்புகிறேன். அது நம் விசுவாச நடைக்கும், பெலத்தை அளிக்கிறது என்று அறிந்திருக்கிறேன்.
விசுவாசம் அன்பின் மூலமாக கிரியை செய்கிறது என்று வேதாகமம் போதிக்கிறது. கலா 5:6 லே அன்பினாலே பெலப்பட்டு, கிரியை செய்யும் விசுவாசமே உதவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அன்பில்லாதபடி விசுவாசத்திலே நடக்க முயற்சி செய்வது, பேட்டரி இல்லாத லைட்டை கொண்டிருப்பது போன்றதாகும். நம்முடைய ‘அன்பு’ என்னும் பேட்டரி எப்போதும் சார்ஜ் ஆக்கப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். இல்லையென்றால் நம் விசுவாசம் வேலை செய்யாது. கிறிஸ்தவர்களின் விசுவாசம், தேவனுடனான உறவின் முக்கியமான பகுதியாகிய அன்பிலே நடப்பதை, ஜாக்கிரதையாக அவர்கள் தொடரா விட்டால் பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொள்வார்களென்று நம்புகிறேன்.
எனவே அன்பின் வாழ்வைத் தொடர்ந்து, உங்கள் விசுவாசம் பெலப்பட்டு வளர்வதைப் பாருங்கள். தேவனுடைய அன்பு முதன்மையாக இருக்கும் போது மற்ற அனைத்தும் பின் தொடரும்.
ஜெபம்
தேவனே, என்னுடைய விசுவாசம் அன்பில்லாத படி பயனற்றது என்று அறிந்திருக்கிறேன். உம்முடைய அன்பால் பொங்கி வழியும் ஒரு வாழ்க்கையை வாழ உதவுவீராக. நான் உம்முடைய அன்பைப் பெற்றுக் கொண்டு அதை பிறருக்கு கொடுக்கையிலே என்னை நடத்துவீராக.