
இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள். (2 நாளாகமம் 20:1)
இன்றைய வசனத்தில், மோவாபியர்கள், அம்மோனியர்கள் மற்றும் மேயூனியர்கள் ராஜா யோசபாத்துக்கும், யூதாவின் மக்களுக்கும் எதிராக வந்தார்கள் என்று பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டில், மற்ற இடங்களில், ஜெபூசியர்கள், ஹிட்டியர்கள் மற்றும் கானானியர்கள் தேவனுடைய மக்களுக்கு தொல்லை தருபவர்களாக இருந்தனர்.
ஆனால் நம்மைப் பொறுத்தவரை, “பயம்”, “நோய்”, “மன அழுத்தம்,” “நிதிப் பிரச்சனைகள்,” “பாதுகாப்பின்மை”, “அண்டை வீட்டார்” மற்றும் பல நம்மைத் தொடர்ந்து வந்து நமக்கு எதிராய் நிற்கிறது.
இப்போது இவற்றில் எது உங்களைத் துரத்துகிறது? அவைகள் எதுவாக இருந்தாலும், யோசபாத் ராஜாவுக்குப் எதிராய் வந்த “ஆட்களுக்கு” அவர் பதிலளித்த விதத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளலாம். அவர் செய்த முதல் காரியம் பயம், ஆனால் அவர் உடனடியாக வேறொன்றைச் செய்தார்: அவர் தேவனைத் தேடத் தொடங்கினார். அவரிடமிருந்து கேட்கத் தீர்மானித்த யோசபாத், அந்த நோக்கத்திற்காகவே தனது ராஜ்யம் முழுவதிற்கும் உபவாசத்தை அறிவித்தார். தான் தேவனிடமிருந்து கேட்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அவருக்கு ஒரு போர் திட்டம் தேவைப்பட்டது, தேவன் மட்டுமே அப்படிப்பட்ட வெற்றிகரமான ஒரு திட்டத்தைக் கொடுக்க முடியும்.
யோசபாத்தைப் போல, நமக்கு கஷ்டம் வரும்போது மக்களிடம் ஓடாமல் கடவுளிடம் ஓடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய சொந்த ஞானத்தை வைத்து ஆலோசிப்பதை விட அல்லது மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்பதை விட, நாம் அவரைத் தேட வேண்டும். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது “தொலைபேசிக்கு ஓடுகிறோமா அல்லது அவரது சிம்மாசனத்திற்கு ஓடுகிறோமா” என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். தேவன் ஏதாவது ஒரு நபரைப் பயன்படுத்தி நமக்கு அறிவுரை சொல்லலாம், ஆனால் நாம், எப்போதும் முதலில் அவரைத் தேட வேண்டும்.
தேவனுடைய சத்தத்தைக் கேட்பது, பயத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழியாகும். நாம் அவரிடமிருந்து கேட்கும்போது, நம்முடைய இருதயம் விசுவாசத்தால் நிரம்புகிறது. அது பயத்தை நம்மிடமிருந்து விரட்டுகிறது. யோசபாத் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தான் தேவனிடமிருந்து கேட்க வேண்டும் என்பதை அறிந்திருந்தார், இப்போது நமக்கும் அதே தேவை இருக்கிறது. இன்றே தேவனைத் தேடி, அவருடைய சத்தத்திற்கு செவிசாய்க்க வேண்டும்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் வாழ்க்கையில், உங்களுக்கு எதிராய் வரும் காரியங்களிலிருந்து, உங்களைப் பாதுகாக்க தேவனிடம் கேளுங்கள்.