“சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,” – பிலி 3:13
இப்படி ஆகிவிட்டால் …?
ஒருவர் எவ்வளவு நீண்ட காலம் வாழ்கிறாரோ, அவ்வளவாக அவர் ‘இப்படி ஆகிவிட்டால்’ என்று நினைத்து அது ஏற்படுத்தும் வருத்தத்தையோ அல்லது துக்கத்தையோ அனுபவிப்பதுண்டு. நற்செய்தி என்னவென்றால், இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு, “இப்படி ஆகிவிட்டால்?” என்பது கடந்த காலத்தைப் பற்றிய வருத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக இல்லாமல் தேவன் அவர்களுக்காக வைத்திருக்கும் ஒரு ஆச்சரியமான எதிர்காலத்தை எதிர் நோக்கும் ஒரு சவாலாக இருக்கலாம்.
ஒரு முறை ஒரு சபை போதகர், நான்கு எளிய காரியங்களை, ஒரு மாதத்திற்கு செய்து, வருகின்ற புதிய வருடத்திற்காக தங்களை பரிசுத்தக் கொள்ளும் படி தன் சபை அங்கத்தினரிடம் கூறினார். அவர் அவர்களை ஒவ்வொரு நாளும் ஜெபம் செய்யவும், வாரத்தில் ஒரு நாள் உபவாசம் செய்யும் படியும், தசமபாகம் செலுத்தவும், இரட்சிக்கப்படாத ஒருவரை வாராவாரம் சபைக்கு அழைத்து வரும் படியும் கூறினார்.
இதன் விளைவாக அந்த தேவாலயத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு முன்னேற்றம் ஏற்பட்டது. ஆராதனையிலே கடவுளுடைய பிரசன்னம் வல்லமையாக இறங்கியது. ஊழியம் சம்மந்தப்பட்ட திட்டங்களுக்காகவும், கட்டிடங்களுக்கும் ஆச்சரியமாக நிதியுதவி கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவாலய உறுப்பினர்கள் இழந்து போன ஆத்துமாக்களை கடவுளுடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வருவதற்கான ஒரு அற்புதமான பருவத்தில் நுழைந்தனர்.
இன்று, நான் உங்களுக்கு சவால் விட விரும்புகிறேன்: அந்த தேவாலயத்தைப் போலவே இன்று நீங்கள் கடவுளைப் பின்தொடர்ந்தால் எப்படி இருக்கும்? உங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அவருக்காக அர்ப்பணித்தால் எப்படி இருக்கும்? கடவுளால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க நீங்கள் தயாராக இருந்தால் எப்படி இருக்கும்? என்ன நடக்கும்?
ஜெபம்
ஆண்டவரே, “இப்படி ஆகி விட்டால்?” என்று கேட்டுக் கொண்டு என் வாழ்க்கையை செலவிட நான் விரும்பவில்லை, என் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. இன்று உம்மை பின்தொடர நான் ஒரு புதிய உறுதிப்பாட்டை செய்கிறேன், என் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் அற்புதமான காரியங்களைக் காண ஆவலாக இருக்கின்றேன்.