அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். (லூக்கா 23:34)
மக்கள் ஜெபிக்கும் விதம் மற்றும் அவர்கள் ஜெபிக்கும் விஷயங்கள், அவர்களின் குணம் மற்றும் ஆவிக்குறிய முதிர்ச்சியைப் பற்றி நிறைய வெளிப்படுத்துகிறது என்று நான் நம்புகிறேன். என்னுடைய ஜெப வாழ்க்கை அதிக ஆவிக்குறிய முதிர்ச்சியைக் குறிக்காத ஒரு காலம் இருந்தது. நான் மீண்டும் பிறந்தவளாக இருந்தாலும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பவளாக இருந்தாலும், என் ஜெபங்கள் பரிதாபகரமானவையாக இருந்தன. நான் என் கோரிக்கைகளின் பட்டியலிலைவைத்து ஜெபித்த போது, நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முன் கடவுள் அதற்கெல்லாம் ஆம் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் – அவை அனைத்தும் இயற்கையாக நடக்கும் விஷயங்கள் தான்: “ஆண்டவரே, என் ஊழியத்தை வளரச் செய்யும். எங்களுக்கு ஒரு புதிய கார் கொடும்; இதை செய்யும்; அதை செய்யும். டேவை மாற்றும். குழந்தைகளை சரியாக நடந்து கொள்ளச் செய்யும்,” போன்ற பல கோரிக்கைகள்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, கடவுள் என்னிடம் கூறினார், “நீ இயேசுவின் ஜெபங்களையும், பவுலின் ஜெபங்களையும் ஆராய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” பிறகு உன்னுடைய பிரார்த்தனை வாழ்க்கையைப் பற்றி பேசுவோம் என்றார். நிச்சயமாக, வேதம் முழுவதும், குறிப்பாக சங்கீதங்களில் பல பிரார்த்தனைகள் உள்ளன. ஆனால் நற்செய்திகளில் காணப்படும் இயேசுவின் ஜெபங்களையும், நிருபங்களில் காணப்படும் பவுலின் ஜெபங்களையும் ஜெபிக்கும்படி கடவுள் என்னிடம் கூறினார்.
இயேசு ஜெபித்த விதத்தில் நான் ஜெபிக்க ஆரம்பித்த போது, கடவுளுடைய வார்த்தையை பயன்படுத்தி ஜெபிப்பதை விட, சக்தி வாய்ந்த வழி வேறு எதுவுமில்லை என்பதைக் கண்டுபிடித்தேன். ஏனென்றால் அது அவருக்கு, முக்கியமானது என்ன என்பதைக் காட்டுகிறது. இன்றைய வசனத்தில் நாம் வாசிக்கும் ஜெபங்கள் மற்றும் பல பிரார்த்தனைகளை அவர் ஜெபித்தார், “சத்தியத்தைக் கொண்டு அவர்களை பரிசுத்தப்படுத்துங்கள், உமது வார்த்தையே சத்தியம்” (யோவான் 17:17); அவர் மக்கள் மத்தியில் ஒற்றுமைக்காக பிரார்த்தனை செய்தார் (யோவான் 17:23 பார்க்கவும்); மற்றும் பேதுருவுக்காக அவர் ஜெபம் செய்தார்: “உங்கள் [சொந்த] விசுவாசம் வீண்போகாதபடிக்கு, நான் உங்களுக்காக விசேஷமாக ஜெபித்தேன்” (லூக்கா 22:32).
சுவிசேஷங்களைப் படித்து, இயேசு எப்படி ஜெபித்தார் என்பதைப் பார்க்கவும், பிறகு நீங்கள் கடவுளிடம் பேசுவதையும், கேட்பதையும் போலவே ஜெபிக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் தம்முடைய அன்பை உங்களுக்கு வெளிப்படுத்தவும், நீங்கள் அதை உணர்ந்து அறிந்து கொள்ளவும் ஜெபியுங்கள்.