இயேசுவின் மேலிருந்த அதே தயவிலே நடவுங்கள்

இயேசுவின் மேலிருந்த அதே தயவிலே நடவுங்கள்

“இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.” – லூக்கா 2:52

சிறு பிராயத்திலிருந்தே இயேசு தேவனோடும் மனிதர்களோடும் இயற்கைக்கு அப்பாற்பட்ட தயவிலே நடந்தார். உண்மையிலேயே அவர் மிகவும் பிரசித்தி பெற்றவராக இருந்ததால் அவர் தமது பரலோக பிதாவுடன் ஜெபித்து, ஐக்கியப்பட நேரம் இல்லாதிருந்தது. அவர் கிறிஸ்து என்று விசுவாசியாமலிருந்தவர்களும் கூட அவர் தேவ தயவிலே நடந்ததை இணம் கண்டு கொண்டனர்.

இயேசுவை சிறை பிடிக்கும் படி பரிசேயர்களால் அனுப்பப்பட்ட போர் சேவகர்கள் திரும்பி வந்து ‘இந்த மனிதன் பேசுவதைப் போன்று வேறெந்த மனிதனும் பேசியதில்லை’ என்றனர். (யோவாண் 7:46). அவர் வாழ்க்கையின் இறுதி வரையிலும், சிலுவையில் இருந்த போதும் தேவன் அவரோடிருக்கிறார் என்று மக்கள் உணர்ந்து கொண்டனர் (லூக்கா 23:47-48).

இதே தயவு நமக்கும் இருக்கிறது. என்ன நடந்தாலும் சரி, தேவனோடும், பிற மக்களிடமும் நமக்கு தயவு இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது (லூக்கா 2:52). ஆனால் நம் வாழ்விலும் அதைப் பெற்றுக் கொள்ள தேவன் பேரிலே விசுவாசத்தை வைக்க வேண்டும்.

எனவே இன்று இயேசுவுக்கு கொடுத்த அதே தயவை தேவன் உங்களுக்கும் கொடுப்பார் என்று அறிந்தவர்களாய் விசுவாசத்தில் வாழுங்கள். உங்கள் வாழ்க்கையின் சூழ்னிலைகள் எப்படி இருப்பினும், இயற்கைக்கப்பாற்பட்ட தயவுக்காக தேவனை நம்புங்கள்.


ஜெபம்

தேவனே, இயேசு கொண்டிருந்த அதே அளவு தயவு எனக்கும் இருக்கின்றது. உம்மோடும், மக்களோடும் நான் தயவைக் கொண்டிருப்பேன் என்ற விசுவாசத்தில் வாழும் படி எனக்கு உதவுவீராக.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon