“அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” – எபி 12:2
எல்லாவற்றிற்கும் பொதுவாக இரண்டு பக்கங்கள் உண்டு. சிலுவைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு: சிலுவையில் அறையப்படுதல் மற்றும் உயிர்த்தெழுதல். இயேசு மற்றொரு பக்கத்திற்கு செல்ல ஒரு பக்கத்தை சகிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் சகித்திராவிட்டால், நாம் அனைவரும் இன்னும் ஒரு இரட்சகர் இல்லாமல் இருந்திருப்போம். நம்முடைய பாவங்களும் மன்னிக்கப்பட்டிருபதில்லை.
எபிரெயர் 12:2 கூறுகிறது, இயேசு சிலுவையின் மறுபக்கத்தில் உள்ள பரிசை பெறும் மகிழ்ச்சிக்காக (உயிர்த்தெழுதல்) வேதனையைத் தாங்கினார். இயேசுவைப் போலவே, கடினமான காரியங்களையும் நாம் சகித்துக்கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மைக்கான எனது விளக்கம் “பிசாசை விஞ்சுவது. அதிக சோதனை நம் வாழ்வில் என்னவெல்லாம் செய்யுமோ, அதை விடாமல் இறுதி வரை உறுதியாக இருந்து சிலுவையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு செல்வதாகும்.
நாம் எதிர்பாராத சூழ்நிலையால் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பின் அல்லது ஏதாவது தவறாக செய்ததினால் பாடுபட்டுக் கொண்டிருப்பின் அல்லது சரியானதைச் செய்வதின் மூலம் பாவத்தையும், சோதனையையும் எதிர்ப்பதாக இருப்பினும் நாம் காரியங்களினூடே கடந்து செல்ல வேண்டும். ஆனால் கடினமான காலங்களின் மறுபுறத்தில் பரிசைப் பெறுவதின் மகிழ்ச்சி உங்களுக்காகக் காத்திருக்கிறது.
இன்று, சோதனைகளை இயேசு கையாண்ட விதத்தைப் பார்த்து ஊக்கமடையுங்கள். தனக்கு முன்பிருந்த மகிழ்ச்சியை அவர் அறிந்திருந்தார், கடைசி வரை விடாமுயற்சியுடன் இருந்தார். அதையே செய்ய உங்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜெபம்
தேவனே, நான் இயேசுவைப் போல சகித்துக் கொள்ள விரும்புகிறேன். எந்தவொரு சோதனையையும் நான் சகிக்கத்தக்கதாக, எனக்காக காத்திருக்கும் அந்தப் பரிசைப் பெறுவதன் மகிழ்ச்சியைப் பற்றிய தரிசனத்தைப் பெற்றுக் கொள்ள எனக்கு உதவுவீராக.