
“அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து.” – லூக்கா 23:24
ஒருமுறை ஒரு வாலிபன் குடித்து விட்டு வண்டி ஓட்டியதால் விபத்து ஏற்படுத்தி ஒருவரின் மனைவியையும், குழந்தையையும் கொன்று விட்டான் என்று கேள்விப்பட்டேன். அந்த விபத்தை ஏற்படுத்திய வாலிபனை தான் மன்னித்து விட வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரென்று அந்த மனிதன் அறிந்திருந்தான். அதிகமான ஜெபத்தினால் தேவ அன்பு அவர் மூலமாய் பாய்ந்து செல்ல அனுமதித்தார்.
இயேசுவைப் போன்று எப்படி மன்னிக்க வேண்டுமென்று அந்த மனிதர் அறிந்திருந்தார். அந்த வாலிபனும் மனக்காயமடைந்தவனாய் இருந்த படியால் சுகம் அவனுக்கு தேவைப்படுகிறது என்பதை அறிந்திருந்தார்.
மக்கள் நம்மை காயப்படுத்தும் போது அவர்கள் நமக்கு என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதை விட்டு விட்டு அவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால் மனக் காயமடைந்திருப்பவர்கள் மற்றவர்களை காயப்படுத்துவர். பொதுவாக ஒருவன் மற்றவரை காயப்படுத்தும் போது, அவனும் காயப்பட்டுக் கொண்டிருக்கிறான், தனக்குள் வருந்திக் கொண்டும் இருக்கிறான். அதனால் தான் சிலுவையில், வேதனையில் இயேசு தொங்கிக் கொண்டிருந்த பொழுது தம்மை கொலை செய்தவர்களை, ‘பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்’ என்றார்.
இது நம்ப முடியாத மன்னிப்பு. இன்று அது உங்களை தூண்டி விட்டு எழுப்பட்டும். நாமனைவரும், இயேசுவைப் போன்று மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
ஜெபம்
தேவனே, மக்கள் என்னை காயப்படுத்தும் போது, என்னுடைய வலியைத் தாண்டி அவர்களுடைய வலியைப் பார்க்க எனக்கு உதவும். இயேசுவைப் போன்று நேசிக்கவும், மன்னிக்கவும் எனக்கு உதவும்.