“உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.” – சங்கீதம் 37:5
தேவன் மீது நம்பிக்கையை வளர்ப்பதின் மூலம், உங்கள் வாழ்வை எளியையாக்கிக் கொள்ளலாம். அனேக சமயங்களிலே நாம் நம்மை நம்ப அனுமதிப்பதில்லை. ஒருவேளை கடந்த காலங்களிலே உங்கள் நம்பிக்கையானது பல முறை சோதனைக்குள்ளாகி இருக்கலாம். அல்லது நீங்கள் தன்னிச்சையாக செயல்படுபவராக இருக்கலாம். ஆயினும் தேவனை நம்புவது மிக முக்கியமாகும்.
நீங்களே உங்களுடைய வாழ்க்கையை வாழ முயலுவதால், சுலபமாகவே மன அழுத்தத்திற்குள்ளாகி, சோர்ந்தும் போய் விடலாம். ஆனாலும், அதனால் எதுவும் நடப்பதில்லை. தேவனுடைய திட்டமானது எப்போதுமே உங்களுடைய திட்டத்தை விட மேலானதாக இருக்கிறது. தேவனை நம்புபவன் அவருடைய வழியே சிறந்தது என்று அறிந்திருக்கிறான்.
நம்பிக்கையானது ஒரு வித்தையை போன்று ஏற்படுகிறதில்லை. நாம் விசுவாச அடிகளை எடுத்து, தேவனுடைய உண்மைத்தண்மையை அனுபவமாக அறிந்து கொள்ளும் போது தான் நம்பிக்கை வளர்கிறது. தேவனை முழுமையாக நம்பி உங்கள் வாழ்க்கையை தொடர நீங்கள் உங்கள் சந்தேகத்தையும், பயத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏன் பயங்கரமான தன்னிச்சையையும் கூட எதிர்க்க வேண்டும். அப்படி செய்வீர்களென்றால் வெற்றி பெற போராட வேண்டிய அவசியம் இல்லை.
தேவனை நம்புவது, நம் ஆத்துமாவிற்கு, இயற்கைக்கப்பாற்பட்ட இளைப்பாறுதலை அளித்து நாம் எப்படி வாழ வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அப்படி எளிமையாகவும், சுயாதீனத்துடனும் வாழ ஏதுவாக்கின்றது. எனவே புரியா விட்டாலும் கூட அவரை நம்புங்கள். அவரது விடுதலையையும், இளைப்பாறுதலையும் அனுபவியுங்கள்.
ஜெபம்
தேவனே, என்னுடைய வழியைக் காட்டிலும் உம் வழிகள் மேலானவைகள். என் சொந்த பெலத்தை நம்புவது என்னை எங்கும் கொண்டு செல்லாது என்று அறிந்திருக்கிறேன். என் நம்பிக்கையை உம் மீது வைக்கிறேன். நீர் உமது திட்டங்களை நிறைவேற்றுவீர் என்று அறிந்தவளாக எனக்கு புரியா விட்டாலும் உம்மை நம்ப தெரிந்து கொள்கிறேன்.