
“கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,” – சங் 40:1–2
பெரும்பாலானவர்கள் அவர்கள் ஒன்றுக்கும் தகுதியில்லாதவர்கள் என்று நினைத்தால் மட்டுமே, தேவன் அவர்களுக்கு உதவ அனுமதிக்கின்றனர். அப்படியாகத்தான் நானும் வாழ்ந்து கொண்டிருந்தேன். பல ஆண்டுகள், தேவன் எனக்கு உதவ தேவையானவற்றை நான் சம்பாதித்திருந்தால், அவரது உதவிக்கு தேவையான நண்மையான காரியங்களை நான் செய்திருந்தால் மட்டுமே அவர் எனக்கு உதவ வேண்டுமென்று நான் உணர்ந்ததுண்டு.
அத்தகைய எண்ணமானது ஒரு நன்றியறிதலான மனப்பான்மையை உருவாக்குகிறதில்லை. நாம் என்ன பெற்றுக் கொள்ளுகிறோமோ அதை பெற்றுக் கொள்ள தகுதியானவர்களென்று நாம் நினைத்தால் அது இனியும் ஒரு பரிசாக கருதப்படாமல், ஒரு பலனாக அல்லது சேவைக்கான வெகுமானமாகவே கருதப்படும். நாம் எதற்கு தகுதியில்லையோ அதைப் பெற்றுக் கொள்வதும், எதற்கு தகுதியானவர்களோ அதைப் பெற்றுக் கொள்வதற்கும் உள்ள வித்தியாசம் கிருபைக்கும், கிரியைக்கும் உள்ள வித்தியாசமாகும்.
நீங்கள் உங்கள் இருதயத்தை திறந்து, தேவனுடைய கிருபை உங்கள் வாழ்வுக்குள் வந்து உங்கள் அனுதின வாழ்க்கையிலே உங்களுக்கு உதவ நீங்கள் அனுமதிக்க வேண்டுமென்று உங்களை உற்சாகப்ப்டுத்துகிறேன். நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டுவதெல்லாம், நீங்கள் விரக்தியை உணரும் போது, அது உங்கள் சொந்த முயற்சியிலே வாழ முயலுவதால் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். தேவனுடைய கிருபைக்குள்ளாக மீண்டும் வந்து உங்கள் மூலமாக அவர் கிரியை செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்ளுங்கள்.
தேவன் உங்களுக்கு தயை செய்ய அனுமதிப்பதை கற்றுக் கொள்ளுங்கள். தேவனுடைய உதவியை பெற்றுக் கொள்ள, தகுதியாக இருக்க முயற்சிப்பதை விட்டு விட்டு, உங்களுடைய ஒவ்வொரு தேவையையும் அவரே பூர்த்தி செய்ய அனுமதியுங்கள்.
ஜெபம்
தேவனே, நான் தகுதியாக இருப்பதாக உணரும் போது மட்டுமே உம்முடைய உதவியை ஏற்றுக் கொள்ளும் முட்டாள்தனத்தை நான் உணர்ந்து கொண்டேன். என்னுடைய சொந்த கிரியைகளை நான் விட்டு விட்டு உம்முடைய கிருபையை ஏற்றுக் கொள்கிறேன். நான் தகுதியாக இல்லாமல் இருக்கும் போதும் எல்லா சூழ்னிலையிலும் எனக்கு நீர் உதவி செய்கிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.