“ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.” – எபே 2:10
தேவன் உங்களை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள்ளாக நடத்திச் செல்ல விரும்புகிறார். அவர் உங்களுக்காக ஏற்கனவே ஆயத்தமாக்கி வைத்திருக்கிற நல்ல வாழ்க்கையை வாழத்தக்கதாக கிறிஸ்துவுக்குள் மறுபடியும் புதிதாக பிறந்திருக்கிறீர்கள்.
மாற்றம் என்ற வார்த்தையைக் குறித்து பயப்பட வேண்டாம். அதன் அர்த்தம் என்னவென்றால், இதுவரை நீங்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை நிறுத்தி விட்டு இதுவரை செய்யாத காரியங்களை செய்யத் தொடங்க வேண்டும். உதாரணமாக எதிர்மறையாக எண்ணுவதை நிறுத்தி விட்டு நேர்மறையாக எண்ணத் தொடங்க வேண்டும். உங்களுடைய சவுகரிய வட்டத்திலே உட்கார்ந்து விடுவதை விட்டு விட்டு வெளியே வாருங்கள் … காலந்தாழ்த்துவதை நிறுத்தி விட்டு, வரும் வாய்ப்புகளை தொடர வேண்டும்.
வாக்களிக்கப்பட்ட தேசத்தைப் பற்றி வாசிப்பதும், பேசுவதும் மட்டும் போதாது, அதை சுதந்தரித்துக் கொள்ள தீர்மாணியுங்கள். தேவன் நல்லவர், அவர் உங்களை நடத்துவார். நீங்கள் பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் படி தேவன் உங்களை ஆயத்தமாக்கிக் கொண்டிருக்கும் போது, அவர் உங்கள் வாழ்விலே கொண்டு வர விரும்பும் நேர்மறையான மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அதைப் பின்பற்ற விருப்பமுள்ளவர்களாக இருங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, வாக்களிக்கப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள நான் செய்ய வேண்டிய மாற்றங்களை எனக்கு காட்டுவீராக. பிறருக்கு நான் ஆசீர்வாதமாக இருக்க என்னை ஆயத்தப்படுத்துவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். எனக்காக நீர் வைத்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவீராக.