
“ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” – எபேசியர் 6:12
சவால்கள் நிறைந்த சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? சில பகுதிகளில் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமா? எங்கேயிருந்து எப்படி அது நிறைவேறும் என்பதைப்பற்றி அறியாமல் இருக்கிறீர்களா? இன்று அநேக கிறிஸ்தவர்கள் பல கடுமையான கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். சிலர் தங்கள் வேலைகளையும், ஆதாயங்களையும் இழந்து விடுகின்றன. மற்றவர் இக்கட்டான ஆரோக்கிய பிரச்சினைகளால் போராடிக் கொண்டிருக்கின்றனர். அடிப்படையான தேவைகளான உறைவிடம், உணவு, உடையோடு மருத்துவ செலவுகளையும் எப்படி சமாளிப்பது என்ற தொடர் பயத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த உலகிலே நம்மை பயப்படுத்தும் அனேக காரியங்கள் இருக்கின்றன. ஆனால் நம் மிகப்பெரிய எதிரியாகிய பயம் அங்கே இல்லை.
எபேசியர் 6:12-ல் நாம் மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அல்ல. நம் ஆத்தும எதிரிக்கு எதிராக போராடுகிறோம் என்று சொல்கிறது. போரில் நம் எதிரியின் அடையாளத்தில் குழப்பம் அடையக்கூடாது.
நம் காணக்கூடாத தேவனானவர், காணக்கூடாத எதிரியோடு போராட அதிக திறன் படைத்தவராக இருக்கிறார். நாம் தேவன் பேரிலே கொண்டிருக்கும் நிபந்தனையற்ற அன்பை பற்றி ஆழமாக அறிந்து கொள்ளலாம். நமக்கான அனைத்தையும் அவர் பொறுப்பேற்று நடத்துவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
உங்களுடைய காண இயலாத எதிரியை பற்றி பயப்பட தேவை இல்லை. தேவனை நம்புங்கள். ஆவிக்குரிய அந்தகார சக்திகளை தோற்கடிக்கக்கூடிய, அவர் பேரிலே நம்பிக்கையாய் இருங்கள்.
ஜெபம்
தேவனே, என் உண்மையான எதிரி யார் என்பதை மறக்காத படியும், நீர் சர்வ வல்லமை உள்ளவர் என்பதை நான் மறக்காத படியும் எனக்கு உதவும். எதிரி என் வழியே எறியும் அனைத்தையும் என்னால் சமாளிக்க முடியாது என்றும், உம்மால் ஆகும் என்பதையும் அறிந்திருக்கிறேன்.