“நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல.” – 2 கொரி 10:3
கவனமாக வடிவமைக்கப் பட்ட சூழ்ச்சியினாலும், தந்திரமான வஞ்சனையினாலும் சாத்தான் உங்களுக்கு எதிராக போராடி, தோற்றுப் போன மன நிலையிலே உங்களை வைப்பான். ஆனால் தேவனோ அவனுக்கு எதிராக உபயோகிக்கும் படி ஆவிக்குறிய ஆயுதங்களைக் கொடுத்திருக்கிறார். அந்த மூன்று ஆயுதங்கள் இதோ:
- தேவனுடைய வார்த்தை: இதனை பிரசங்களின் மூலமாகவும், போதனைகளின் மூலமாகவும், வாசிப்பதின் மூலமாகவும், தனிப்பட்ட வேத பாடங்களின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால் அது உங்களுக்கு வெளிப்பாடாகும் வரை வார்த்தையிலே தொடர்ந்து இருங்கள்.
- துதி: இது பிசாசை மற்ற எந்த போர் திட்டங்களைக் காட்டிலும் வேகமாகவும், திறம்படவும் தோற்கடிக்கிறது. ஆனால் அது ஒரு உண்மையான துதியாக இருக்க வேண்டும். ஒரு உதட்டளவிளான துதியாகவோ, பக்தி சம்பந்தமானதாகவோ இருக்கக் கூடாது.
- ஜெபம்: தேவனுடனான உறவே ஜெபமாகும். அது அவருடன் தொடர்பு கொள்வதாகும். உதவிக்காக கேட்பதோ அல்லது உங்கள் இருதயத்தில் இருப்பதைப் பற்றியோ அவருடன் பேசுவதாகும். அது தேவனுடைய பிரசன்னத்திலே அமைதியாக இருப்பதையும் உள்ளடக்கும். உங்கள் இருதயத்தில் அவர் சொல்வதைக் கேட்பதும் உள்ளடங்கும். நாம் பிதாவோடு நெருக்கமான தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் உங்களை நேசிக்கிறாரென்றும், உங்களுக்கு உதவ விரும்புகிறாரென்றும் அறிந்திருக்க வேண்டும்.
ஒரு போர் நடந்து கோண்டிருக்கிறது; ஆனால் தேவன் உங்கள் பட்சமாய் போராடிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு வேண்டிய ஆயுதத்தையும் கொடுத்திருக்கிறார். சாத்தான் புறமுதுகிட்டு ஓடும் படி அவற்றை உபயோகியுங்கள்!
ஜெபம்
தேவனே, எதிரிக்கு எதிராக போராட, நீர் கொடுத்திருக்கும் ஆவிக்குறிய ஆயுதங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய உதவியோடு போரை வென்று விடலாம் என்று அறிந்திருக்கிறேன்.