“இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.” – 2 தீமோ 1:6
தேவனுடைய அன்பு நிபந்தனையற்றது, என்றும் நிலைத்திருக்கக்கூடியது. அவர் தமது அன்பை எனக்கு வெளிப்படுத்தின் போது நான் எவ்வளவு ஆச்சரியப்பட்டேன், சந்தோசப்பட்டேன் என்பதை நினைவில் கொண்டுள்ளேன். நான் வெடித்து சிதறி விடுவேன் என்பது போல் தோன்றினது!
ஆனால் கொஞ்ச காலத்திற்கு பின் தேவன் என்னை நேசிக்கிறாரென்ற உண்மை எனக்கு பழகிவிட்டதால் முன்பிருந்த அதே மாதிரியான வாஞ்சை என்னில் காணப்படவில்லை.
அப்படி உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றதா? அப்படி இப்போது உணர்ந்து கொண்டிருக்கின்றீர்களா? அப்படியென்றால் அதைப் பற்றி நீங்கள் ஏதாவது செய்யலாம் என்று நான் நம்புகிறேன்.
பவுல் தீமோத்தேயுவிடம், முன்பு கொண்டிருந்த அனலை மூட்டி விடு என்று கூறுகிறார். தீமோத்தேயுவுக்கு பவுல் சொன்ன செய்தி தான் இன்று உங்களுக்கும் எனக்கும். உன்னை அனல் மூட்டு. பழையது, பழையது என்று களைப்புடன் வாழ்வதை நிறுத்துங்கள்.
நாம் இதை நினைவில் கொள்ள வேண்டும். வாஞ்சை ஒரு உணர்ச்சியாக மாறுவதற்கு முன், வாஞ்சையோடு வாழ்க்கையை அணுக தீர்மாணிக்க வேண்டும்.
எனவே, ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் சிருஷ்டிகருடன் நீங்கள் கொண்டிருக்கும் உறவைப் பற்றிய சந்தோசத்துடன் விழித்தெழ இன்றே தீர்மாணியுங்கள். உங்களை அனல் மூட்டி எழுப்பி அவரைப் பற்றிய ஆச்சரியத்தில் வாழுங்கள்.
ஜெபம்
தேவனே, உம்மைப் பற்றி நான் என்றுமே ஆச்சரியப்பட விரும்புகிறேன். வாஞ்சையின்றி வாழ மாட்டேன். உம்மை அறிந்து கொள்வது ஆச்சரியமானது. உம்மோடு நான் கொண்டிருக்கும் உறவைப் பற்றிய ஆச்சரியத்திலே நான் வாழத் தெரிந்து கொள்கிறேன்.