“கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,” – லூக்கா 4:18
நான் துஷ்பிரயோக பின்னணியில் இருந்து வருகிறேன். சரியாய் செயல்படாத ஒரு குடும்பத்திலே வளர்க்கப்பட்டேன். என்னுடைய சிறுபிராயம் பயத்தாலும், துன்புறுத்தல்களும் நிறைந்திருந்தது.
ஒரு இளம் வாலிப பெண்ணாக, கிறிஸ்துவுக்காக வாழவும், கிறிஸ்தவ வாழ்க்கை முறையை பின்பற்றவும் முயன்று கொண்டிருந்தபோது, என்னுடைய எதிர்காலம், என் கடந்தகாலத்தால் கறைபட்டு இருக்கும் என்று நம்பினேன். என்னை போன்ற கடந்த காலத்தை கொண்டிருக்கும் ஒருவர் எப்படி நன்றாக இருக்க முடியும்? என்று நினைத்தேன். அது இயலாதது!
ஆனால் இயேசுவோ கர்த்தருடைய ஆவி என்மேல் இருக்கிறார்…. சிறை பட்டவர்களுக்கு விடுதலையை அறிவிக்க என்னை அனுப்பினார்…. சிறைச்சாலைகளின் கதவுகளைத் திறந்து, சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கவே இயேசு வந்தார். என்னுடைய கடந்த கால சிறையினின்று தேவன் என்னை விடுதலையாக்க விரும்புகிறார் என்று நான் உணரும் வரை என்னால் எவ்வித முன்னேற்றமும் அடைய முடியவில்லை. என்னுடைய கடந்த காலமும், நிகழ்காலமும் நான் அனுமதித்தாலொழிய என்னுடைய எதிர்காலத்தை தீர்மானிக்காது என்பதை நான் நம்ப வேண்டியிருந்தது. தேவன் என்னை அற்புதமாக விடுதலைகயாக்க நான் அனுமதிக்க வேண்டியிருந்தது.
உங்கள் நிகழ்காலத்தை எதிர் மறையாகவும், சோர்வடையும் வகையிலும் தொடர்ந்து பாதிக்கக்கூடிய ஒரு நிர்ப்பந்தமான கடந்த காலம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் நான் உங்களிடம் தைரியமாக, உங்கள் எதிர்காலம் உங்களுடைய கடந்த காலத்தாலும், நிகழ்காலத்தாலும் நிர்ணயிக்கப்பட வேண்டியதில்லை என்று சொல்கிறேன்! கடந்தகால கட்டுகளை உடைப்பாராக.
ஜெபம்
தேவனே, நீர் என்னுடைய கடந்த காலத்தை விட வல்லமை மிக்கவர் என்பதை நான் நம்புகிறேன். நீர் எனக்கு கொடுக்கும் விடுதலையை நான் பெற்றுக்கொள்கிறேன். எனக்காக நீர் கொண்டிருக்கும் திட்டத்தில் வாழ விரும்புகிறேன்.