
“நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.” – அப் 16:25-26
சில நேரங்களில் இதுபோன்ற பயங்கரமான குழப்பங்களில் நாம் காணப்படுகிறோம், விடுதலைக்காய் இன்னும் ஒரு நொடி காத்திருப்பதை கற்பனை செய்வது கூட கடினம். ஆனால் நாம் கடவுள் பேரிலே ஒரு இனிமையான மற்றும் எளிமையான நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும். பின்னர், நாம் நினைத்திராத வழியில் தேவன் செயல்படுவார்!
பவுலுக்கும், சீலாவுக்கும் காத்திருப்பது பற்றித் தெரியும், அவர்கள் நன்றாகக் காத்திருந்தார்கள். அப்போஸ்தலர் 16-ல் அவர்கள் எப்படி ஒரு கூட்டத்தால் தாக்கப்பட்டு, அடித்து சிறையில் தள்ளப்பட்டதை வேதம் சொல்லுகிறது. 24 வது வசனம், சிறைச்சாலை தலைவன் அவர்களை உள்ளான சிறைச்சாலையில் (நிலவறையில்) போட்டான். அவர்களின் கால்களை தொழுவத்தில் மாட்டியிருந்தான் என்று வேதம் சொல்லிகிறது. பவுலும், சீலாவுமோ அதை கண்டு கொள்ளவில்லை – அவர்கள் பாடவும், தேவனை ஆராதிக்கவும் முடிவு செய்தனர். அவர்கள் தேவனிடத்தில் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
திடீரென்று, கடவுள் பூகம்பத்தை அனுப்பினார், அது சிறை கதவுகளைத் திறந்து அவர்களின் சங்கிலிகளை அவிழ்த்துவிட்டது. அவர் அவர்களை விடுவித்தார்!
கொடூரமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் மக்கள் பொறுமையுடனும், எதிர்பார்ப்புடனும் கடவுளுக்கு காத்திருக்கும்போது, திடீரென்று தேவன் திருப்பு முனையை ஏற்படுத்துகிறார்.
எனவே விட்டுவிடாதீர்கள்! நம்புவதை நிறுத்த வேண்டாம்! நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் நிறைந்தவராக இருங்கள். தேவனுடைய வல்லமைக்கு எல்லையில்லை. அவர் உங்களுக்காக முன்னேற்றங்களை அருள் செய்வார்.
ஜெபம்
கடவுளே, என் குழப்பங்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், என் சிறையில் உம்மை துதிக்க நான் தேர்வு செய்கிறேன். என்னை விடுவிப்பதற்கான நேரம் சரியாக இருக்கும்போது நீர் எனக்காக வருவீர் என்று எனக்குத் தெரியும்.