“உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.” – யாக் 1:3
விசுவாச முதிர்ச்சி ஒரே இரவில் நடந்து விடுவதில்லை. கடவுள்மீது ஆழ்ந்த, ஆரோக்கியமான, உறுதியான விசுவாசத்தை நாம் பெற விரும்பினால், அதை பலப்படுத்த விசுவாசத்தைப் பயிற்சிக்க வேண்டும்.
இராணுவத்தில் உள்ள வீரர்களைப் பற்றி சிந்தியுங்கள். அவர்கள் சேரும் போதே தீவிரமான போருக்கு தயாராக இருப்பதில்லை. அவர்கள் அடிப்படை பயிற்சியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவர்களுக்கு எந்தவித இரக்கமின்றி பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த ‘ஆயத்தப்படுதலை’ செய்ய பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் வீரர்கள் பெலத்தையும், உறுதியையும் மீண்டு வரும் தண்மையையும், பொறுமையையும், சகிப்பு தண்மையையும் பெற்றிருக்க வேண்டும்.
இதை நமது விசுவாசத்தின் அடிப்படையில் சிந்திக்கலாம். முதலில், நாம் பட்டியலில் இடம் பெறுவோம் அல்லது நம் வாழ்க்கையை கிறிஸ்துவுக்குக் கொடுக்கிறோம். பின்னர் நாம் விசுவாசத்தை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சி திட்டத்தை தொடங்குவோம். இந்த விஷயத்தில், பரிசுத்த ஆவியானவரே நம் பயிற்றுவிப்பாளராக செயல்படுகிறார்.
நம் ஒவ்வொருவருடைய விசுவாசத்தைக் கட்டியெழுப்ப என்ன தேவை என்பதை பரிசுத்த ஆவியானவர் நன்கு அறிவார். எனவே நாம் எல்லா சமயத்திலும் ஆயத்தமாக இருக்க முடியும். சவாலானதாக இருந்தாலும் நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது அவருக்குத் தெரியும். நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு பயிற்சியளிக்க அனுமதிக்கும்போது, அதன் பலன் கிடைக்கும். தேவன் பேரிலே வலுவான, உறுதியான விசுவாசமானது, பயிற்சிக்காக நாம் கொடுக்கும் நேரத்தையும், முயற்சியையும் பொருத்ததாக இருக்கும்!
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, நான் உங்கள் அறிவுறுத்தலுக்கு அடிபணிவேன். நான் உம்மிடம் ஒரு முதிர்ந்த, உறுதியான நம்பிக்கை வைக்க விரும்புகிறேன். எனக்குத் தேவைப்படும் ஒவ்வொரு காரியத்திலும், சூழ்நிலையிலும் உம்மை நம்பி, விசுவாசித்து நடக்க என்னைப் பயிற்றுவிப்பீராக.